முதலைக்கண்ணீர்.. ஆதாரத்துடன் வசமாக சிக்கிய நிர்மலா.. சபாநாயகர் என்ன செய்ய போகிறீர்கள்? வெங்கடேசன் கேள்வி.!

By vinoth kumarFirst Published Aug 3, 2022, 8:08 AM IST
Highlights

நிர்மலா சீதாராமன் முதலைக்கண்ணீர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என சபாநாயகர் ஓம் பிர்லாவை டேக் செய்து  எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

நிர்மலா சீதாராமன் முதலைக்கண்ணீர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என சபாநாயகர் ஓம் பிர்லாவை டேக் செய்து எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த ஜூலை 18-ஆம் தேதி, மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கப்படுவதற்கு முன்னதாகவே தடை செய்யப்பட்ட வார்த்தைகளின் பட்டியல் வெளியானது. அதன்படி, கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல, வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல் ஆகிய பொதுவான வார்த்தைகளும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 

இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு பற்றி விவாதம் நடந்தது. அப்போது தமிழில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்காதது முதலைக் கண்ணீர் வடித்த கதை. மத்திய அரசு குறைப்பார்கள் ஆனால் நான் குறைக்க மாட்டேன் என்றிருக்கிறார்கள் என்று பேசியிருந்தார்.

முதலைக் கண்ணீர் என்ற வார்த்தை தடை செய்யப்பட்டிருந்த நிலையில் அதை மத்திய அமைச்சரே பேசியிருக்கிறாரே என்று சுட்டிக் மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- “ முதலைக்கண்ணீர்” என்ற சொல் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று பேசிய நிர்மலா சீதாராமன் இந்த சொல்லை அழுத்தந்திருத்தமாக பயன்படுத்தினார். என்ன செய்யப்போகிறீர்கள்  சபாநாயகர் ஓம்  பிர்லாவை டேக் செய்து என சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!