நிர்மலா தேவி வழக்கு….. அந்த 4 பேரிடம் நடந்த விசாரணை…. வெளிவந்த திடுக் தகவல்கள்….

First Published Apr 21, 2018, 9:16 AM IST
Highlights
Nirmala devi enquiry by santhanam and team


பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்துச் செல்ல முயன்ற விவகாரத்தில் பிரச்சனையை அம்பலப்படுத்திய 4 மாணவிகளிடம் நடைபெற்ற விசாரணையில்  இவர்கள் தவிர மேலும் ஒரு மாணவியையும் அவர் அழைத்திருப்பது தெரியவந்துள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை  நிர்மலா தேவி பாலியல் வலை வீசிய மாணவிகளிடம் அவர்கள் பெற்றோர் முன்னிலையில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக விசாரிக்க ஆளுநரால் நியமிக்கப்பட்ட சந்தானம்,  அன்னை தெரசா மகளிர் கல்லூரி பேராசிரியை கமலி, வேளாண் பல்கலைக்கழக பேராசிரியை தியாகேஸ்வரி ஆகியோர் முதலில் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்கள் பேராசிரியை பேசியதாக கூறப்படும் 4 மாணவிகளிடமும் விசாரணை நடத்தினர். பெற்றோர் முன்னிலையில் நடந்த விசாரணையில் மாணவிகள் விரிவாக தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளனர்.

நிர்மலா தேவி இந்த 4 மாணவிகள் மட்டுமல்லாமல் மற்றும் ஒரு மாணவியிடமும் பாலியல் தொடர்பான வலையை வீசியுள்ளார். ஆனால் அந்த மாணவி கடைசி நேரத்தில் நிர்மலா தேவியுடனான தொடர்பை துண்டித்து விட்டார். இதைத் தொடர்நது இந்த 4 மாணவிகள் மட்டுமே நிர்மரா தேவியுடன் பேசியுள்ளனர்.

இதையடுத்து அந்த 5 ஆவது மாணவியிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என விசாரணைக்குவினர் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தானம், ''4 மாணவிகள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளிவருவதால் அவர்கள் மன உளைச்சலில் உள்ளதாக தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் இதுவரை 9 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும், மேலும்  12 பேரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

இன்று அல்லது வரும் வரும் 25-ம் தேதி நிர்மலா தேவியிடம்  விசாரணை நடத்த உள்ளதாகவும்,  பேராசிரியை நிர்மலாதேவியை சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தாலும், அவரிடம் விசாரணை மேற்கொள்ள தனக்கு எந்தத் தடையுமில்லை என்றும் சந்தானம் தெரிவித்தார்.

click me!