நிர்மலாவின் கலக்கல் அறிவிப்பு ! முதலீ்ட்டாளர்களின் பங்குமதிப்பு ரூ.7 லட்சம் கோடியாக அதிகரிப்பு… பங்குச்சந்தை 1921 புள்ளிகள் உயர்வு….

By Selvanayagam PFirst Published Sep 20, 2019, 9:21 PM IST
Highlights

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பல்வேறு வரிச்சலுகைளால், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,921 புள்ளிகள் உயர்தது. முதலீட்டாளர்களின் சொத்துமதிப்பும் ரூ.7 லட்சம் கோடியாக உயர்ந்தது

இந்த உயர்வு 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஏற்றமாகப் பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 5 சதவீதமாக குறைந்தது, ஆட்டமொபைல் துறையில் விற்பனைக் குறைவால் பொருளாதாரம் தேக்கமடைந்தது. இதனால் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் 3 முறை முக்கியத் திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவத்தார். இன்று 4-வது கட்டமாக நிறுவனங்களுக்கு பல்வேறு வரிச்சுலுகளைகளை அறிவித்தார்.

இதனால் பங்குச்சந்தையில் நல்ல மாற்றம் பங்குகள் விலை உயரத் தொடங்கின. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ரூ.1.40 லட்சம் கோடியில் இருந்து, ரூ.2.11 லட்சம் கோடியாக அதிகரித்தது.

மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 1300 புள்ளிகள் வரை உயர்ந்தது. அதிகபட்சமாக வர்த்தகப் புள்ளிகள் வர்த்தகத்தின் இடையே 38,378 வரை சென்றது. இந்த உயர்வு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருந்தது.

வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 1,921.15 புள்ளிகள் உயர்ந்து, 38,014 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியில் 569.40 புள்ளிகள் உயர்ந்து 11,274.20 புள்ளிகளில் வர்த்தகம் முடிவு பெற்றது

மும்பைப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஹீரோ மோட்டார், இன்டஸ் இந்தியா வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, மாருதி சுஸூகி, எய்ச்சர் மோட்டார்ஸ், பாரத்பெட்ரோலியம், ஹெச்யுஎல், லார்சன் அன்ட் டூப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகமான லாபத்தை ஈட்டின.
அதேசமயம், பவர்கிரிட், இன்போசிஸ், டிசிஎஸ், என்டிபிசி, டெக் மகி்ந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சரிந்தன.

click me!