உலகஅளவில் இனி இந்தியாதான் குறைவு: முதலீட்டை ஈர்க்க நிர்மலா சீதாராமன் அறிவித்த புதிய திட்டம்

By Selvanayagam PFirst Published Sep 20, 2019, 10:28 PM IST
Highlights

உலகஅளவில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் வகையிலும், உள்நாட்டில் வேலைவாய்பபை பெருக்கும் வகையில் கார்ப்பரேட் வரியை அதிரடியாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்து இன்று அறிவித்தார்.
 

இந்த அறிவிப்புக்குப்பின், உலக சராசரியைக் காட்டிலும் இந்தியாவில்தான் கார்ப்பரேட் வரி மிகக்குறைவாகும். இதனால், இனிவரும் ஆண்டுகளில் வரிச்சலுகைக்காக இந்தியாவில் முதலீடு செய்ய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார வளர்்்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை, திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில வாரங்களாக அறிவித்து வருகிறார். அந்த வகையில் இன்று கார்ப்பரேட் நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களுக்காக பல்வேறு வரிச்சலுகைகளை நிதியமைச்சர் அறிவித்தார்.


அதன்படி, நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை 22% ஆக குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் மூலம்கார்ப்பரேட் வரியில் உலக சராசரியைக் காட்டிலும் இந்தியாவில்தான் இந்த வரி குறைவு என்று தெரியவந்துள்ளது.

ஆனாலும் இந்தச் சலுகை மற்ற விலக்குகளையும் சலுகைகளையும் பெறாத நிறுவனங்களுக்குத்தான் என்றாலும் இப்போது இந்த வரிக்குறைப்பு மூலம் ஆசியாவிலும் உலகின் சில நாடுகளையும் ஒப்பிடும்போது இந்தியாவில் கார்ப்பரேட் வரி குறைவுதான். இதன் மூலம் முதலீடு அதிகரிக்கும் வேலை வாய்ப்புப் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் கார்ப்பரேட் வரி ஆசிய நாடுகளில் எடுத்துக்கொண்டால், , மலேசியாவில் 24சதவீதம், இந்தோனேசியா மற்றும் கொரியா,மியான்மர் 25 சதவீதம், இலங்கையில் 28 சதவீதம். சீனாவில் 25% வரி செலுத்துகின்றன, பிரேசிலில் 34% வரி நடைமுறையில் உள்ளன. கார்ப்பரேட் வரியின் உலக சராசரி தற்போது 23.79 சதவீதமாகவும், ஆசிய கார்ப்பரேட் வரி சராசரி 21.09 சதவீதமாகவும் இருக்கிறது.

உலக அளவில் கார்ப்பரேட் வரிகள் 2003-ம் ஆண்டில் இருந்து குறைக்கப்பட்டு வந்துள்ள நிலையில் இந்தியாவில் 30 சதவீதமாக குறைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அதிரடி வரிக்குறைப்பு மூலம் இந்திய நிறுவனங்கள் உலக அளவில் சரிசம போட்டியிட முடியும்.
 

click me!