வெளிநாட்டில் உள்ள விடுதலை புலிகள் அமைப்பின் நிர்வாகிகளோடு தொடர்பில் இருந்து கொண்டு பணம் திரட்டி வருவதாக கூறப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தி வரும் நிலையில் அக்கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள விடுதலை புலிகள் அமைப்பின் நிர்வாகிகளோடு தொடர்பில் இருந்து கொண்டு பணம் திரட்டி வருவதாக கூறப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக திருச்சி வயலூர் சாலை சண்முகா நகரில் சாட்டை துரைமுருகன் வீடு, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர்கள், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த விஷ்ணு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன், கோவை மாவட்டம் ஆலாந்துறை ஆர்.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான முருகன் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: NIA RAID : நாம் தமிழர் கட்சியை குறிவைத்த என்ஐஏ... லண்டனில் யாருடன் தொடர்பு- திடீர் ரெய்டுக்கு பின்னனி என்ன.?
இந்நிலையில், வரும் 7ம் தேதி சென்னையில் உள்ள அலுவலகத்தில் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுத்து விட்டு என்ஐஏ அதிகாரிகள் சென்றனர். இந்த சூழலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் என்ஐஏ சோதனைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்ஐஏ ரெய்டு நிறைவு.! சாட்டை துரைமுருகன், நாதக நிர்வாகிகள் வீட்டில் ஆவணங்கள் பறிமுதலா.? நேரில் ஆஜராக சம்மன்
இந்நிலையில் என்ஐஏ சோதனை மற்றும் சட்ட விதிமீறலை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், சோதனை தொடர்பாக தங்களுக்கு எந்த சம்மனும் அனுப்பாமல் அவசரகதியில் நடத்தப்பட்ட இந்த சோதனை சட்ட விதிமீறல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றக்கொண்ட நீதிபதி எம்.எஸ்.ராமேஷ் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.