Udhayanidhi Stalin: அமைச்சராகும் நேரத்தில் உதயநிதிக்கு வந்த புதிய சிக்கல்.. அதிர்ச்சியில் திமுக..!

Published : Dec 22, 2021, 07:06 AM IST
Udhayanidhi Stalin: அமைச்சராகும் நேரத்தில் உதயநிதிக்கு வந்த புதிய சிக்கல்.. அதிர்ச்சியில் திமுக..!

சுருக்கம்

உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனக்கு எதிரான  வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறி, அவரது வேட்புமனு ஏற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். 

உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவை ஏற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 3 மாதங்களாக எதிர்மனுதாரர் தரப்பில் இன்னும் வாதங்களை முன்வைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அடுத்த விசாரணையின்போது வாதங்களை தொடங்காவிட்டால், மனுவின் தன்மைக்கு ஏற்ப உத்தரவு பிறப்பக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க;- Pongal Gift: அடிதூள்.. ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு பணம்? வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு..!

இதனிடையே, ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனக்கு எதிரான  வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறி, அவரது வேட்புமனு ஏற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம், தொகுதி தேர்தல் அலுவலர், எம்.எல்.ஏ. உதயநிதி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க;- திமுகவுக்கு இதே பொழப்பா போச்சு.. அன்றைக்கு கருணாநிதி செய்ததை இப்போது ஸ்டாலின் செய்கிறார்.. போட்டு தாக்கும் TTV

மேலும், பல்வேறு  தேர்தல் வழக்குகளில், எதிர்மனுதாரராக  சேர்க்கப்பட்டுள்ள அந்தந்த தேர்தல் அலுவலர்களை எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து  நீக்க கோரிய   மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு  உத்தரவிட்ட நீதிபதி,  வழக்கு விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். உதயநிதியை அமைச்சராக வேண்டும் என அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!
தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்