கர்ப்பிணிகளுக்கு சலுகை, இல்லதரசிகளுக்கு புதிய திட்டம் - பெண்களை கவரும் பிரதமர் மோடியின் முயற்சி

First Published Dec 31, 2016, 8:34 PM IST
Highlights


நாடுமுழுவதும் உள்ள இல்லத்தரசிகளுக்கு புதிய திட்டம் கொண்டு வரப்படும். 650 மாவட்டங்களில் உள்ள கர்பிணிகளுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை  தடை செய்த அறிவித்தபின், ஏறக்குறைய 50 நாட்களுக்கு பின் பிரதமர் மோடி நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அவர்  பெண்களுக்கான திட்டம்  குறித்துக் கூறுகையில், “

கர்பணிப்பெண்களுக்கு புதிய திட்டம். நாடுமுழுவதும் 650மாவட்டங்கலுக்கு கர்பிணிப்பெண்களுக்கு  ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு சிறப்புத் திட்டம் கொண்டு வரப்படும். குழந்தைகள் வன்முறை பாதையில் நுழைவதை தடுக்க வேண்டும். 

கடந்த 50 நாட்களாக  தொழில்நுட்ப உதவியோடு தவறு செய்பவது பல வழிகளில் தடுக்கப்பட்டுள்ளது. இந்தி புத்தாண்டை புதிய தீர்மானத்துடன் வரவேற்போம். கருப்புணத்தை ஒழிக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் மக்கள் கஷ்டங்களை ஏற்றுக்கொண்டனர்’’ எனத் தெரிவித்தார்.

click me!