டெங்குவிற்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு...! அபாயகரத்தை தாண்ட இது ஒன்றே வழி..!

First Published Oct 13, 2017, 2:49 PM IST
Highlights
new medicine for dengue is found says sidha doctor


புதிய மருந்து கண்டுபிடிப்பு…!  

தமிழகத்தை ஆட்டி படைக்கும் டெங்குவிற்கு நிலவேம்பு கசாயம் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது...

தற்போது இதற்கு மாற்றாக வெள்ளருகு சாற்றை கொடுத்தால் ரத்தத்தில் உள்ள ப்ளேட்லட் கவுண்ட் விரைவாக அதிகரிக்க தொடங்கும் என ஆந்திராவை சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதாவது நிலவேம்பு கசாயம் என்ன செய்கிறது தெரியுமா ?

டெங்கு காய்ச்சல் வந்தால்,அதிலிருந்து விடுபட அதாவது,காய்ச்சல் சற்று குறைய மிகவும்  பயனுள்ளதாக இருப்பது நில வேம்பு கசாயம்.இது காய்ச்சலை மட்டும் தான் கட்டுப்படுத்தும் என  தெரிவித்துள்ளார்.

இதற்கு மாற்றாக வெள்ளருகு சாற்றை கொடுத்தால் அபாயகரத்தை தாண்டிவிட முடியும் என  தெரிவித்துள்ளார் சித்த மருத்துவர்

வெள்ளருகு சாறு

வெள்ளருகை எடுத்து இரவில் தண்ணீரில் ஊற வைத்து விடவும் 
காலையில்,அந்த ஊறிய சாற்றை எடுத்து,மிக்சியில் போட்டு நன்கு அரைத்து,அதனை இளநீருடன்  சேர்த்து காலை மாலை என இரண்டு நேரமும் குடித்து வந்தால் நல்லது.

ஒரே நாளில் ப்ளேட்லேட் கவுண்ட் அதிகரித்து,அபாயகரமான நிலையை தாண்டி விடலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சாற்றை தொடர்ந்து சில நாட்களுக்கு பருகி வந்தால் முழுவதும் நிவாரணம் கிடைக்கும்  என நம்பிக்கையாக தெரிவித்துள்ளார்.

நிலவேம்பு கசாயதிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளருகுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உறுவாகி உள்ளது. 
  

click me!