எங்க ஆட்சி டெங்கு ஆட்சினா... நீங்க பண்ணது எய்ட்ஸ் ஆட்சி..! திமுகவை தாக்கிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்..!

 
Published : Oct 13, 2017, 01:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
எங்க  ஆட்சி டெங்கு ஆட்சினா... நீங்க பண்ணது எய்ட்ஸ் ஆட்சி..! திமுகவை தாக்கிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்..!

சுருக்கம்

minister o.s.manian criticize dmk

முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சியை டெங்கு ஆட்சி என விமர்சித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, திமுக ஆட்சி எய்ட்ஸ் ஆட்சி என பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய ஆட்சியை டெங்கு ஆட்சி என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். மேலும் பழனிசாமி தலைமையிலான டெங்கு ஆட்சி ஒழிந்தால்தான் தமிழகத்தில் டெங்கு ஒழியும் எனவும் அவர் விமர்சித்திருந்தார். இதேபோல் தினகரனும் தற்போதைய ஆட்சியை டெங்கு ஆட்சி என விமர்சித்தார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், எங்கள் ஆட்சி டெங்கு ஆட்சி என்றால் திமுக ஆட்சி எய்ட்ஸ் ஆட்சி என விமர்சித்தார்.

டெங்கு ஆட்சி என விமர்சித்த ஸ்டாலினுக்கு பதிலளித்துவிட்ட அமைச்சர், அதே விமர்சனத்தை முன்வைத்த தினகரனுக்கு என்ன பதிலளிப்பார்?

ஆக மொத்தத்தில் இரண்டு பேருமே(திமுக, அதிமுக) தமிழகத்தின் வியாதிதான் என்பதை மாறி மாறி ஒத்துக்குறீங்க.. என மக்கள் கிண்டலடிக்கின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!
தவெகவுடன் கூட்டணிக்கு தவமிருக்கும் அதிமுக.. விஜய் போட்ட ஒரே நிபந்தனை... டரியலாகும் இபிஎஸ்..!