இந்திய குடியுரிமை சட்டம் நிறைவேற்றினால் 2ம் சுதந்திர போர் எச்சரிக்கும் புதுவை முதல்வர் நாராயணசாமி!!

By Thiraviaraj RMFirst Published Mar 8, 2020, 9:56 PM IST
Highlights

இந்திய நாட்டில் சுதந்திரத்துக்காக முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் போராடினார்கள். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அப்படியில்லை என்றால் இந்த சட்டம் 2-ம் சுதந்திர போராட்டத்துக்கு வழிவகுக்கும்.

 

T.Balamurukan

இந்திய நாட்டில் சுதந்திரத்துக்காக முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் போராடினார்கள். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அப்படியில்லை என்றால் இந்த சட்டம் 2-ம் சுதந்திர போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்து பேசினார். 

மக்கள் குடியுரிமை இயக்கம் சார்பில் பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி அருகே ஐகிரவுண்டு திடலில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், ம.தி.மு.க. மாநில துணை செயலாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி, முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.


புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அந்த மாநாட்டில் பேசினார்.

"மக்களவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மதசார்பற்ற அணிகளை சேர்ந்த 24 கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தன.  இச்சட்டம் நிறைவேற முக்கிய காரணமாக இருந்த கட்சி. அ.தி.மு.க. அதன் மூலம் மிகப்பெரிய வரலாற்று பிழையை அ.தி.மு.க. செய்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் விலக்கி குடியுரிமை கொடுக்க முயல்வதால் இச்சட்டத்தை அனைவரும் எதிர்க்கின்றோம்.புதுச்சேரி மாநிலத்தில் இச்சட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளோம். இச்சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இந்திய நாட்டில் சுதந்திரத்துக்காக முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் போராடினார்கள். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அப்படியில்லை என்றால் இந்த சட்டம் 2-ம் சுதந்திர போராட்டத்துக்கு வழிவகுக்கும். பா.ஜனதா கூட்டணி கட்சி ஆட்சியிலுள்ள மாநிலங்களில் கூட இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. பா.ஜ.க.வை எதிர்த்தால் தங்களது ஆட்சி பறிபோய் விடும் என்று அ.தி.மு.க. அஞ்சுகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டி பேசினார்.

click me!