தமிழகம் வந்தார் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி... விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு.!

Published : Sep 16, 2021, 09:41 PM ISTUpdated : Sep 16, 2021, 09:43 PM IST
தமிழகம் வந்தார் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி... விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு.!

சுருக்கம்

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி சென்னை வந்து சேர்ந்தார்.  

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். நாகலாந்தில் ஆளுநராக இருந்த அவரை, தமிழக ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவுப் பிறப்பித்தார். அவர் வரும் 18-ஆம் தேதி ஆளுநராகப் பதவியேற்றுக்கொள்ள உள்ளார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். 
இந்நிலையில் ஆர்.என்.ரவி டெல்லியிலிருந்து இன்று இரவு சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் வரவேற்றனர். முன்னதாக, தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். 

PREV
click me!

Recommended Stories

ஓட்டு கேட்க எதுனாலும் சொல்லலாம்.. அதிமுகவை விமர்சித்த ராமதாஸ்.. யாருடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பு!
காப்பி அடிக்கிறாங்க மிஸ்.. இன்னும் நல்லா கதறுங்க.. திமுகவை கலாய்த்து பதிலடி கொடுத்த அதிமுக!