மீண்டும் தள்ளிப் போகும் உள்ளாட்சி தேர்தல்..! வேறு தேதிக்கு மாற்றம்..!

By Manikandan S R SFirst Published Dec 6, 2019, 11:37 AM IST
Highlights

மாவட்டங்கள் தவிர்த்து பிற இடங்களில் புதிய தேதியில் தேர்தல் அறிவிக்கப்படும் என கூறியுள்ள தேர்தல் ஆணையம், ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பாணையை திரும்ப பெற்றுள்ளது. 

தமிழகத்தில் ஊராட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் வார்டு வரையறை முழுமையாக நிறைவடையும் வரையில் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று திமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தற்போது மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற இடங்களில் புதிய தேதியில் தேர்தல் அறிவிக்கப்படும் என கூறியுள்ள தேர்தல் ஆணையம், ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பாணையை திரும்ப பெற்றுள்ளது. 

click me!