9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை..! உச்சநீதிமன்றம் அதிரடி..!

Published : Dec 06, 2019, 11:07 AM ISTUpdated : Dec 06, 2019, 11:10 AM IST
9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை..! உச்சநீதிமன்றம் அதிரடி..!

சுருக்கம்

பிரிக்கப்பட்டிருக்கும் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊராட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் வார்டு வரையறை முழுமையாக நிறைவடையும் வரையில் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று திமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று காலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?