உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்துங்கள்..! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

By Manikandan S R SFirst Published Dec 6, 2019, 10:45 AM IST
Highlights

பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊராட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் வார்டு வரையறை முழுமையாக நிறைவடையும் வரையில் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று திமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.


இதுதொடர்பான வழக்கில் இன்று காலையில் தீர்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் புதிய மாவட்டங்களில் எதனடிப்படையில் வார்டு வரையறை செய்யப்பட்டிருக்கிறது என கேட்டிருந்தனர். மேலும் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களிலும் தேர்தலை தள்ளி வைக்க சம்மதம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!