"தமிழகத்தில் இருந்து ஷிண்டே புறப்படுவார் !" அண்ணாமலை கிளப்பிய புது சர்ச்சை

By Raghupati RFirst Published Jul 5, 2022, 8:12 PM IST
Highlights

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று கூறி தமிழக முழுவதும் பாஜகவினர் இன்று உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில், சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 39 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் உத்தவ் தாக்கரே கடந்த 29-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து கடந்த 30-ம் தேதி புதிய அரசை அமைத்தன. 

சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து பேரவையில் 4-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். அதன்படி பெரும்பான்மையை நிரூபித்தார் ஷிண்டே.

மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று கூறி தமிழக முழுவதும் பாஜகவினர் இன்று உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

மேலும் செய்திகளுக்கு.. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை வெளுக்க போகுது.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

அப்போது, ‘மகாராஷ்டிரா மாநிலத்தை போல தமிழகத்திலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார். 2024-ல் தமிழகத்தில் நிச்சயம் 25 எம்.பிக்களை பாஜக உருவாக்கும். 25 எம்.பிக்களை நாம் உருவாக்கினால் தான் 180 சட்டமன்ற உறுப்பினர் பெற்று 2026-ல் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியும்’ என்று கூறினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இந்த பேச்சு அரசியல்  வட்டாரங்களில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !

click me!