பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு… ஆய்வு செய்ய பாமக சார்பில் குழு!!

By Narendran S  |  First Published Aug 26, 2022, 10:36 PM IST

பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைக்க 12 கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதுக் குறித்து ஆய்வு செய்ய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 7 பேர் கொண்ட குழு அமைத்துள்ளார். 


பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைக்க 12 கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதுக் குறித்து ஆய்வு செய்ய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 7 பேர் கொண்ட குழு அமைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் மற்றும் அதையொட்டிய  12 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. பாதிக்கப்படவுள்ள 12 கிராம மக்களின் கருத்துகளை அறிவதற்காக அவர்களின் பிரதிநிதிகளை நேற்று காஞ்சிபுரம் நான் சந்தித்து பேசினேன்.

இதையும் படிங்க: "மாமனாரை கவிழ்த்துவிட்டு மருமகன் ஆட்சியை பிடிக்க போகிறார் ".. திமுக கோட்டையில் வெடி வைத்த ஜெயக்குமார்.

Tap to resize

Latest Videos

தங்களின் வாழ்வாதாரமான நிலங்களை பறிக்கக்கூடாது என்பதே அவர்களின் கருத்தாகும். நிலம் கையகப்படுத்தப்படவுள்ள 12 கிராம மக்களை நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிவதற்காக பாமக சார்பில் குழு அமைக்கப்படும் என்று காஞ்சிபுரம் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் அறிவித்து இருந்தேன். அதன்படி பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன... மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

இந்த குழுவில், பாமகவின் பொருளாளர் திலகபாமா, வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, செய்தித் தொடர்பாளர் க.பாலு, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை தலைவர் பசுமைத் தாயகம் அருள், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் பெ.மகேஷ் குமார், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் பரந்தூர் உள்ளிட்ட 12 கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து அவர்களின்  கருத்துகளை கேட்டறிந்து கட்சித் தலைமையிடம் அறிக்கை அளிப்பார்கள். அதனடிப்படையில் தமிழக அரசிடம் கலந்து பேசி இந்த சிக்கலுக்கு தீர்வு காண பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

click me!