
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த எம். நடராஜன் ஓபிஎஸ் பற்றிய கேள்விக்கு கோபமாக பதிலளித்தார்.
அப்போது ஜெயலலிதா ஆட்சியில் 5 நாட்கள் ஓபிஎஸ் காணாமல் போனது ஏன் என்பதை அவர் விளக்குவாரா என்று நடராஜன் பரபரப்பாக கேள்வி எழுப்பினார்.
தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நடராஜனிடம் நெறியாளர் “ஓபிஎஸ் ஜெ மரணத்துக்கு நீதி கேட்கிராரரே” என்று கேட்டதற்கு ஆவேசமடைந்த அவர் “என்ன நீதி கேட்கிறார்? அவர் குற்றச்சாட்டை யாரும் நம்ப தயாராக இல்லை.. அவர் சொந்த மாவட்டத்திலேயே தொண்டர்கள் அவரை நம்ப தயாராக இல்லை.
தேனி மாவட்டத்துக்கு என்னுடன் வாருங்கள்.. அங்குள்ளவர்களை அழைத்து சொல்ல சொல்கிறேன் அவர்களே கூறுவார்கள்.
அவர் மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்களே அவர் பக்கம் இல்லை. இதிலயே தெரியவில்லையா?இரட்டை இலையே அவருக்கு கிடைத்தால் கூட அவரால் ஜெயிக்க முடியுமா?
என்ன சிபிஐ விசாரணை பற்றி கேட்கிறார்? இவர் முதல்வராக இருந்தபோது சிபிஐ விசாரணை கேட்டிருக்க வேண்டியதுதானே?” என்று பேட்டியளித்தார்.
அவர் அதற்கான பணியை துவக்கிய போதுதான் நீக்கினர்கள் என்று சொல்கிறாரே என்று நெறியாளர் கேள்வியெழுப்ப “அவர் அதிமுகவுக்கு எதிராக செயல்படுகிறார்.அவர் செயல்படுவதை தொண்டர்கள் விரும்பவில்லை.கடந்த தேர்தல் நேரத்தில் ஏதோ ஒரு 5 நாள் கஸ்டடியில் இருந்தாரே.. அதை பற்றி சொல்வாரா?” என்று நடராஜன் கேள்வி எழுப்பினார்.
சசிகலா குடும்பத்தினர்தான் தனக்கு எதிராக சதி செய்ததாக தனது பேட்டியில் ஓபிஎஸ் கூறியதாக நெறியாளர் கேள்வி எழுப்ப “இல்லை இல்லை போலீஸ்தான் அப்படி செய்தார்கள். அவர் பொய் சொல்கிறார்.
ஜெ முதல்வராக இருந்தபோது நேரடியாக நடவடிக்கைக்கு ஆளானர் ஓபிஎஸ்.அந்த 5 நாட்கள் அவர் எங்கே போனார் என்பதை அவர் சொல்ல தயாரா?” என்று சவால் விடுத்தார்.