
தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த எம்.நடராஜனிடம் நெறியாளர் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினார்.
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன என்று கேட்டதற்கு “அரசியலுக்கு யாரும் வரலாம்.. யாரும் தடுக்க முடியாது ரஜினிக்கு 1996ல் நல்லதொரு வாய்ப்பு வந்தது.ஆனால் அதை அவர் தக்கவைத்து கொள்ளவில்லை.விட்டுவிட்டார்.வருங்காலத்தில் அவருக்கு அதே போன்று அவருக்கு வாய்ப்பு இருக்குமென்று சொல்ல முடியாது” என்று நடராஜன் பரபரப்பாக பதிலளித்தார்.
1996ல் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக தமாக வலுவாக கூட்டணி அமைத்தபோது ரஜினி அதை ஆதரித்தார்.
அப்போது ஏற்பட்ட மிகப்பெரிய எழுச்சியை ரஜினி பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது விமர்சனமாக எழுந்தது.
ரஜினியின் செல்வாக்கை அதிமுகவினர் ஏற்று கொண்டதில்லை ஆனால் ஜெ. மறைவுக்கு பின்னர் 1996ல் ரஜினிக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருந்ததென்று நடராஜன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.