அரசு பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு இதுதான் காரணம்... திமுகவை விளாசிய நாராயணன் திருப்பதி!!

Published : Dec 20, 2022, 10:16 PM IST
அரசு பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு இதுதான் காரணம்... திமுகவை விளாசிய நாராயணன் திருப்பதி!!

சுருக்கம்

அரசு பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு நிதி மேலாண்மை இல்லாமை தான் காரணம் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

அரசு பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு நிதி மேலாண்மை இல்லாமை தான் காரணம் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவரது டிவிட்டர் பதிவில், அரசு பள்ளிகளை தரம் உயர்த்த நிதி உதவி வாரி வழங்குங்கள் என்ற முழக்கத்தோடு நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன் என்ற திட்டத்தை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கவும், அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளதோடு, இந்த ஃபவுண்டேசன் தலைவராக வேணு ஸ்ரீநிவாசனையும், தூதுவராக விஸ்வநாதன் ஆனந்தையும் நியமிக்கப்பட்டுள்ளதை பாராட்டி வரவேற்கிற அதே வேளையில், அரசு பள்ளிகளின் தரம் இது நாள் வரை குறைந்ததற்கு காரணம் நிதி இல்லாமை அல்ல நிதி மேலாண்மை இல்லாமை தான் என்பதை முதல்வர் அவர்கள் உணர வேண்டும். இப்போதுள்ள தரமற்ற கல்விக்கு காரணம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதிய சலுகைகள் இல்லாததால் மட்டுமல்ல, அவர்களுக்கான சலுகைகள் நிர்வாக சீர்கேடுகளால் மறுக்கப்பட்டதால் தான் என்பதை மறுக்க முடியுமா?

இதையும் படிங்க: ஸ்டாலின் சொத்து பட்டியல் ரெடி! 13 அமைச்சர்களின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி.. பீதியை கிளப்பும் அண்ணாமலை!

தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை விட  அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் பன்மடங்கு அளிக்கப்பட்டும் தரமான கல்வி மாணவ மாணவிகளுக்கு சென்றடையவில்லை என்பதை மறுக்க முடியுமா? இது நிதியினால் ஏற்பட்ட தரக்குறைவு அல்ல, மாநில ஆட்சியாளர்களின், நிதி சுரண்டலினால் ஏற்பட்ட தரக்குறைவு என்ற உண்மையை நாடறியும். அரசுப்பள்ளிகளின் கட்டமைப்புக்கு இது நாள் வரை செலவிடப்பட்ட பல கோடிகளில் ஊழல் முறைகேடுகள் மூலம் ஊழல் அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டது உண்மையா இல்லையா? ஊழல் இல்லாதிருந்தால், முறைகேடுகள் நடக்கமால் தடுக்கப்பட்டிருந்தால், அரசு பள்ளிகளின் கட்டமைப்பு பலமாகியிருக்குமா இல்லையா என்பதை மனசாட்சி உள்ள கல்வியாளர்கள் உணர்ந்தே உள்ளார்கள். அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் வேலைக்கு பல லட்சங்கள் லஞ்சம் கொடுக்கப்படுகிறதா இல்லையா?

இதையும் படிங்க: எம்.எல்.ஏ, எம்.பி பதவி மீது ஆசை இல்லை.. மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ அதிரடி !!

பணியிட மாற்றங்களுக்கு லஞ்சம், அரசு பள்ளிகளில் கொள்முதல் செய்யப்படும் அனைத்து பொருட்களிலும் ஊழல்,லஞ்சம் என முறைகேடுகள் தாண்டவமாடுகிறதா இல்லையா? கல்வித்துறையை ஊழல்துறையாக மாற்றி வருடங்கள் பல ஓடி விட்டன. தமிழக அரசு பள்ளிகளுக்கு இன்றைய தேவை லஞ்ச ஊழலற்ற, முறைகேடுகளற்ற நிர்வாகம் தானேயன்றி நிதி மட்டுமல்ல. கடந்த 30 வருடங்களில் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்க திட்டமிட்ட ரீதியில் அரசு பள்ளிகளின் சீரழிவுக்கு காரணமாகி, கல்வியை வியாபாரமாக்கிய அத்துணை பெருமையும் தமிழக அரசியல்வாதிகளையும், அதற்கு துணை நின்ற அதிகாரிகளையுமே சாரும். முதலமைச்சரின் இன்றைய அறிக்கையானது கவர்ச்சியாக இருந்தாலும், லஞ்ச, ஊழல், முறைகேடுகள் தடுக்கப்பட்டு அரசின் நிதி மேலாண்மை முறையாக இருந்தால் மட்டுமே அரசு பள்ளிகள் சீரமைக்கப்பட்டு, மேம்படுத்தப்படும். இல்லையேல், நிதி வந்து குவிந்தாலும் சீர்கெட்டு போயிருக்கும் அமைப்பில் உள்ள ஓட்டையின் மூலம் வெளியேறிக் கொண்டேயிருக்கும்.சீர்கேட்டின் தன்மையை உணர்ந்து ஆவன செய்வாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு
இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!