எம்.எல்.ஏ, எம்.பி பதவி மீது ஆசை இல்லை.. மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ அதிரடி !!

By Raghupati RFirst Published Dec 20, 2022, 10:09 PM IST
Highlights

திராவிட இயக்கங்கள் 70 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருவதாக அண்ணாமலை கூறி வருகிறார். கண்ணாடி கூண்டில் இருந்து அண்ணாமலை கல் ஏரியக்கூடாது என்று கூறியுள்ளார் துரை வைகோ.

மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அனைத்து விலை உயர்விற்கு காரணம் பெட்ரோல், டீசல் உயர்வு தான். கச்சா விலை குறைந்த போதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறைக்கப்படவில்லை. ஊரை ஏமாற்றுவது அண்ணாமலை வேலை.

ஊழல், வாரிசு அரசியல் கர்நாடகா மாநில மற்றும் இந்தியா முழுவதும் இல்லையா ? என்று கேள்வி எழுப்பினார். கண்ணாடி கூண்டில் இருந்து அண்ணாமலை கல் ஏரியக்கூடாது. திராவிட இயக்கங்கள் 70 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருவதாக அண்ணாமலை கூறி வருகிறார். திராவிட இயக்க கொள்கைகளை குழிதோண்டி புதைத்து, சனாதன, தத்துவங்கள், சித்தந்தங்களை புகுந்த பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதையும் படிங்க..அண்ணாமலை கட்டிய ரபேல் வாட்ச்.. ரபேல் விமான பாகத்தில் செய்யலையா.? உண்மை இதுதான் மக்களே !

பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து அப்பகுதி மக்கள் ககருத்து கேட்டு, விவசாய நிலங்கள் பாதிக்கப்படமால் இருக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர், அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். செண்பகவல்லி அணைத்திட்டம் என்பது 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பிரச்சினை.

இதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். நீதிமன்றத்திலும் தமிழககத்திற்கு ஆதரவாக தீர்வு வந்தாலும் கேரளா அரசு இதுவரையும் அனுமதிக்கவில்லை. இது இரு மாநிலங்கள் சேர்ந்த பிரச்சினை. தமிழக அரசு கேரளா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  பொது வாழ்க்கைக்கு வந்த பின்பு மக்கள் பிரச்சனைக்கு தான் முக்கியம். அரசியலுக்கு வந்த பின்பு என்னுடைய தலையாய பணியே மக்களுக்கு சேவை செய்வது தான். தனக்கு எம்.பி, எம்.எல்.ஏ ஆவது முக்கியமல்ல. அது குறித்து கட்சி தலைமை மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று பேசினார்.

இதையும் படிங்க..ஸ்டாலின் சொத்து பட்டியல் ரெடி! 13 அமைச்சர்களின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி.. பீதியை கிளப்பும் அண்ணாமலை!

click me!