ஜன.4 கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்... பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்!!

By Narendran SFirst Published Dec 20, 2022, 7:19 PM IST
Highlights

சென்னை தலைமைச் செயலகத்தில் ஜனவரி 4 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சென்னை தலைமைச் செயலகத்தில் ஜனவரி 4 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் 35 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தொடரில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சேப்பாக்கம் தொகுதியில் விளையாட்டு மையம்; அடிக்கல் நாட்டினார் அமைச்சர் உதயநிதி

இதில்  இளைஞர் மேம்படுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார். இது உதயநிதி பங்கேற்கும் முதல் அமைச்சரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் புதிய அமைச்சரவை எவ்வாறு செயல்பட வேண்டும்? ஏற்கனவே நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களை எவ்வாறு மீண்டும் ஆளுநருடைய ஒப்புதலை பெற வேண்டும்? என்பன போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இதையும் படிங்க: கந்தசஷ்டி கவசம் பாடி பக்தர்களை பரவசப்படுத்திய இஸ்லாமிய மாணவி

மேலும் புதிய தொழில் திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த பொங்கல் பரிசு பணம் ரூபாய் 1000 கொடுப்பது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட உள்ள முக்கிய முடிவுகள் குறித்த தகவல்களை தமிழக முதல்வர் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

click me!