சாதிக் கொடுமையில் சிக்கி தவிக்கும் தமிழகம்..! திமுக அரசின் சமூக நீதி தோல்வி- சீறும் பாஜக

By Ajmal Khan  |  First Published Mar 13, 2023, 8:11 AM IST

வேங்கைவயல் பகுதியில் நீதியை நிலைநாட்ட வேண்டுமென்றால், சாதிய பிரச்சினைகளை புறந்தள்ளி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டியது காவல் துறையின் கடமை என தெரிவித்துள்ள நாராயணன் திருப்பதி தி மு க அரசின் மிக முக்கியமான சமூக நீதி தோல்வி இது! என  குற்றம்சாட்டியுள்ளார்.


வேங்கைவயல்- சிபிசிஐடி விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம்  இறையூர் கிராமத்தில் வேங்கை வயல் பகுதியில், பட்டியலின சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அந்த மக்களுக்கான தண்ணீர் தொட்டி அந்த பகுதியில் இருக்கிறது. இதில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், சில சமூக விரோதிகள், தண்ணீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்துள்ளனர். இந்த தண்ணீரை குடித்த அப்பகுதி மக்களுக்கு உடல் உபாதகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தடர். இதனையடுத்து மக்கள் குடி தண்ணீர் எடுக்கும் தண்ணீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

வெற்று மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்... ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை பதிலடி!!

குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன்.?

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில், இது தொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாயாராணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

வேங்கை வயலில் பட்டியிலன மக்களுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த அற்ப பதர்களை இன்று வரை கைது செய்யாத தமிழக காவல் துறையின் மெத்தனம் கண்டிக்கத்தக்கது.இந்திய சுதந்திர வரலாற்றில் இதுவரை நடந்திராத கேவலம் இது!பட்டியலின மக்களுக்காக ஒரு குடிநீர் தொட்டி என்பதே,(1/3)

— Narayanan Thirupathy (@narayanantbjp)

 

வேங்கை வயலில்  பட்டியிலன மக்களுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த அற்ப பதர்களை இன்று வரை கைது செய்யாத தமிழக காவல் துறையின் மெத்தனம் கண்டிக்கத்தக்கது. இந்திய சுதந்திர வரலாற்றில் இதுவரை நடந்திராத கேவலம் இது!பட்டியலின மக்களுக்காக ஒரு குடிநீர் தொட்டி என்பதே,எப்படிப்பட்ட அவல நிலையில் தமிழகம் உள்ளது என்பதை உணர்த்துகிறது.

சமூக நீதி தோல்வி

எஸ்.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணை நடத்தி 70 நாட்களாகியும் இது நாள் வரை யாரையும் கைது செய்யவில்லை என்பது தமிழகம் சாதிய கொடுமையில் சிக்கித் தவிக்கிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. நீதியை நிலைநாட்ட வேண்டுமென்றால், சாதிய பிரச்சினைகளை புறந்தள்ளி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டியது காவல் துறையின் கடமை.  தி மு க அரசின் மிக முக்கியமான சமூக நீதி தோல்வி இது! என நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

பாஜக பிரமுகர்களை தொடர்ந்து அமமுக முக்கிய நிர்வாகிகளை தட்டித்தூக்கிய இபிஎஸ்.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்.!

click me!