நாளை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு... தேர்வெழுதும் மாணவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!!

By Narendran S  |  First Published Mar 12, 2023, 11:29 PM IST

தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

இதையும் படிங்க: சிங்களப்படையினரின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்... ராமதாஸ் வலியுறுத்தல்!!

Tap to resize

Latest Videos

undefined

இதை அடுத்து தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம்!!

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், அரசுப் பொதுத்தேர்வுகள் உங்கள் அறிவையும் திறனையும் சோதிப்பவை அல்ல; அடுத்தகட்ட நகர்வுக்கான வழித்துணைதான். அச்சம் தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். பிளஸ்-2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்.தேவையற்ற அழுத்தம் தர வேண்டாம் என்பது பெற்றோருக்கு என் வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார். 

அரசுப் பொதுத்தேர்வுகள் உங்கள் அறிவையும் திறனையும் சோதிப்பவை அல்ல; அடுத்தகட்ட நகர்வுக்கான வழித்துணைதான். அச்சம் தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். பிளஸ்-2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்.தேவையற்ற அழுத்தம் தர வேண்டாம் என்பது பெற்றோருக்கு என் வேண்டுகோள்.

— Kamal Haasan (@ikamalhaasan)
click me!