பைக்கில் சங்கிலியை பறித்த காலம் போய் இப்போ காருல.. இது தான் திராவிட மாடல் ஆட்சியின் சட்டம் ஒழுங்கின் அலங்கோலம்

By vinoth kumar  |  First Published May 16, 2023, 10:26 AM IST

ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்த போது காரில் இருந்த படியே கவுசல்யா கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சி செய்தனர். ஆனால், நகையை விடாமல் இறுக்கமாக பிடித்துக்கொண்டார். 


கோவையில் நடைபயிற்சிக்கு சென்ற போது பின்னால் காரில் வந்த மர்ம நபர்கள் கவுசல்யா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து சம்பவத்தை சுட்டிக்காட்டி நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார். 

கோவை பீளமேடு ஹட்கோ காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார்(42). இவரது மனைவி கவுசல்யா(38). இவர்கள் இருவரும் தினமும் காலையில்  நடைப்பயிற்சி செல்வது வழக்கம். நேற்று கவுசல்யா மட்டும் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். இவர் ஜீவி ரெசிடென்சி பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட போது அவரை பின்தொடர்ந்து கார் ஒன்று வந்துள்ளது. 

Latest Videos

undefined

இதையும் படிஙு்க;- காரில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள்; பெண்ணை தரதரவென இழுத்துச் சென்றதால் பரபரப்பு

ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்த போது காரில் இருந்த படியே கவுசல்யா கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சி செய்தனர். ஆனால், நகையை விடாமல் இறுக்கமாக பிடித்துக்கொண்டார். காருடன் அவரை தரதரவென இழுத்துச் சென்ற திருடர்கள் செயின் கையில் கிடைத்ததும் விட்டுச் சென்றுவிட்டார். இதில், கவுசல்யா அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அலங்கோலம் என நாராயணன் திருப்பதி கடுமையாக சாடியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இதுவரை பைக்கில் சங்கிலியை பறித்த நிலை போய் காரில் சென்று சங்கிலி பறிக்கும் நிலை.  திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அலங்கோலம் என விமர்சனம் செய்துள்ளார். 

click me!