மீண்டும் மதிமுகவுக்கு என்ட்ரியாகும் முக்கிய பிரமுகர்..! ஹேப்பி மூடில் தொண்டர்கள்

Published : Oct 26, 2021, 08:17 AM IST
மீண்டும் மதிமுகவுக்கு என்ட்ரியாகும் முக்கிய பிரமுகர்..! ஹேப்பி மூடில் தொண்டர்கள்

சுருக்கம்

மதிமுகவுக்கு மீண்டும் நாஞ்சில் சம்பத் திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை: மதிமுகவுக்கு மீண்டும் நாஞ்சில் சம்பத் திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து ஊர்தோறும் முழங்கிவர் நாஞ்சில் சம்பத். வைகோவின் தம்பி என்று பாராட்டப்படும் அவர் ஒரு கட்டத்தில் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதில் இருந்து விலகினார்.

பின்னர் அதிமுகவில் சேர்ந்து இன்னோவாவில் பயணித்தார். கொள்கை பரப்பு துணை செயலாளராக பணியாற்றினார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா, தினகரனை ஆதரித்தார். பின்னர் அமமுகவில் இருந்தும் விலகி அரசியல் வேண்டாம், இலக்கிய மேடைகளே போதும் என்றார்.

தேர்தல் வந்த போது திமுகவுக்கு ஆதரவாக களத்தில் நாஞ்சில் சம்பத் நின்றார். அவ்வப்போது சினிமாக்களிலும் தலை காட்டினார். அவரின் துப்புன்னா துடைக்குவேன் வசனம் படு வைரலானது.

இந் நிலையில் எந்த கட்சியிலும் சேராமல் இருந்த நாஞ்சில் சம்பத் மீண்டும் மதிமுகவுக்கே திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கட்சிக்குள் வைகோ மகன் துரையின் வருகை வரலாற்று அரசியல் என்று வரவேற்று பாராட்டி தள்ளி இருந்தார்.

விரைவில் மதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்டு அண்ணன் வைகோவின் கரங்களுக்கு வலு சேர்ப்பார் என்று மதிமுக நிர்வாகிகள் மத்தியில் ஒரு தகவல் உலா வந்து கொண்டு இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..