
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் மாட்டுத்தரகர் என காட்டமாக விமர்சித்துள்ளார் அதிமுகவின் தினகரன் அணியை சேர்ந்த நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.
கடந்த சில நாட்களாக சசிகலா குடும்பத்தை மீது நடத்தப்பட்டிருக்கும் மெகா ரெய்டை நடத்தியது வருமான வரித்துறை. இதனையடுத்து நேற்று முன்தினம் போயஸ் கார்டனுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியது. வருமானவரித்துறையில் இந்த ரெய்டால் அதிமுகதீவிர விசுவாசிகளை எரிச்சலடைய வைத்தது. இதற்கு தினகரன் அப்போதே போயஸ் கார்டன் முன்பு பாஜகவிற்கு எதிரான கோஷங்களை போட்டு போராட்டம் செய்தனர்.
இந்நிலையில், போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நடைபெற்ற இந்த வருமான வரி சோதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் நடந்திருக்காது என ஒட்டுமொத்த அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தினகரன் அணியினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சோதனை குறித்து பேசிய தினகரன் அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத், இந்த சோதனைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி, அரசியல் பின்னணிதான் காரணம் என்றும், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் என்கிற ஒரு கவர்னரை தமிழ்நாட்டில் பொறுப்பு ஆளுநராக நியமித்து பன்னீரையும் - எடப்பாடியையும் மாட்டுத்தரகர் மாதிரி கூட்டி வைத்தது யார் என பேசியுள்ளார்.
மேலும் எனக்கு அருதிப்பெரும்பான்மை இருக்கிறது, ஆட்சி அமைக்க அழையுங்கள் என்று சசிகலா கடிதம் கொடுத்தப் பிறகு அழைக்காமல் தாமதப்படுத்தியது யார்? ஆகவே இந்த ரெய்டில் மிகப்பெரிய அரசியல் பின்னணி, அரசியல் சதி, அரசியல் வன்மம் இருக்கிறது என காட்டமாக கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத்.