பொண்ணு பார்க்க வந்திருக்கீங்களா..? போலீசாரின் 'சர்ச்சை' பேச்சு.. இதுதான் விடியல் ஆட்சியா..?

Raghupati R   | Asianet News
Published : Dec 01, 2021, 08:03 AM IST
பொண்ணு பார்க்க வந்திருக்கீங்களா..?  போலீசாரின் 'சர்ச்சை' பேச்சு.. இதுதான் விடியல் ஆட்சியா..?

சுருக்கம்

  காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்றால், பொண்ணு பார்க்க வந்திருக்கீங்களா ? என்று கேலியாக பேசுகிறார்கள்.இதுதான் விடியல் ஆட்சியா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக சத்தியமூர்த்தி.  

 

இலவசத்தை கொடுத்து விட்டு மதுக்கடைகளை திறந்து வைத்து,  பொய்வாக்குறுதிகளை கொடுத்து வாக்குகளை மக்களைக் ஏமாற்றி விடியாத ஆட்சி செய்து வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கண்டித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாட்டு வண்டியில் ஏறி நின்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் என். பி சத்தியமூர்த்தி பேசிய போது, ‘பொதுமக்களை வஞ்சிக்கின்ற ஆட்சியை திமுக தலைவர், முதல்வர் மு.க ஸ்டாலின் நடத்திக்கொண்டிருக்கிறார். காவல்துறையை ஏவிவிட்டு திமுக தொண்டர்களை வைத்து பொதுமக்களையும், மற்ற கட்சியினரையும் ஆதிக்கம் செய்து அடக்கி வருகிறார். ஜனநாயகத்தை படுகுழியில் இறக்கிக்கொண்டிருக்கிறார். இதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள். 

வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் பொது மக்கள் பிரச்சனைகளுக்காக சென்றால் அங்கு திமுக அல்லாத மற்ற கட்சியினர் கட்சிக்காரர்களை என்ன பொண்ணு பார்க்க வந்திருக்கிறீர்களா? என்று அந்த காவல் நிலைய அதிகாரி கேட்கிறார். அப்போது திமுக ஆட்சியில் காவல் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் என்ன பொண்ணு பார்க்க வருபவர்களுக்கு பொன்னை காட்டுவதற்காக தான் அமர்ந்து இருக்கிறார்களா?  இதுதான் விடியல் ஆட்சியா ? முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி இதுதானா ? என்று நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் என். பி. சத்தியமூர்த்தி கேள்வி எழுப்பினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vijay: ஜெயலலிதா வீட்டில் குடியேறும் விஜய்.?! மீண்டும் பரபரப்பாகும் போயஸ்கார்டன்.!
TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?