
நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. நீட் தேர்வை கொண்டு வந்தது யாரென்று ? காங்கிரஸ் கட்சியா இல்லையா, அந்த நேரம் கலைஞர் ஐயா ‘நீட்’ தேர்வை ஆதரித்தும், வாழ்த்தியும் வரவேற்றும் கடிதம் எழுதியிருந்தாரா இல்லையா. அப்போ திடீர்ன்னு அதிமுக நீட்டை கொண்டு வந்துச்சுன்னு சொல்றீங்க.
நீங்க எதிர்த்து பேசுங்க. எங்களுக்கு தான் தகுதி இருக்கு. உங்களுக்கு என்ன தகுதி இருக்கு. திடீர்னு புனிதர் வேடம் போடுறீங்க. நீட் தேர்வை கொண்டு வந்தது யாரு, ஜிஎஸ்டி கொண்டு வந்தது யாரு,அந்த திட்டங்களை ஆதரித்தது யாரு ? இதே காங்கிரஸ் கட்சி தான். 2019 தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் கட்சி 9வது பக்கத்தில், 11வது வரிசையில் இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை, அதாவது அரசு கொள்முதல் என்ற வரிசையை நீக்கிவிட்டு, தனியார் சந்தைக்கு போங்க என்று சொன்னது காங்கிரஸ் கட்சி. இப்படி ஒரு வாக்குறுதி கொடுத்தீர்களா இல்லையா.
2016 தேர்தல் அறிக்கையில் இதே திமுக வேளாண் சட்டத்தை ஆதரிச்சு வாக்குறுதி கொடுத்துச்சா இல்லையா. நான் வேண்டுமானால் அதை எடுத்துக்காட்டட்டுமா என்று மிகவும் ஆவேசமாக பேசினார் சீமான். தொடர்ந்து பேசிய அவர், திடீர் என்று வேளாண் சட்டம்,நீட்,ஜிஎஸ்டி எதிர்க்குறேன் அப்படினு சொன்னால் எப்படி ? மீத்தேன் திட்டத்தை கொண்டு வருவீங்க, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வருவீங்க அப்புறம் எதிர்ப்பு செய்வீங்க.
ஸ்டெர்லைட் ஆலையை அதேபோல நீங்க கொண்டு வருவீங்க, நீங்களே மூடுவீங்க. நான் எங்க அப்பா செத்துட்டாருன்னு அழுவுறேன் சரி, கொலை பண்ணுனவனும் சேர்ந்து அழுவுறான் இதுல என்ன தர்மம் இருக்கு’ என்று திமுக,காங்கிரஸ் கட்சிகளை போட்டு பொளந்து கட்டியிருக்கிறார் சீமான். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.