ந.பி.பெற்றாள் வாக்குச்சாவடியில் பதற்றம்.. போலீசார் - பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு.. வாக்குப்பதிவு நிறுத்தம்.!

By vinoth kumarFirst Published Apr 6, 2021, 3:26 PM IST
Highlights

செஞ்சி அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள  வாக்குச்சாவடியில் போலீசார் - பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, வாக்குப்பதிவு ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்டது. 

செஞ்சி அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள  வாக்குச்சாவடியில் போலீசார் - பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, வாக்குப்பதிவு ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்டது. 

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, வாக்காளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல்  நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்து வருகிறார்கள்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியை அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வந்தனர். வயதானவர்களை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் ஓட்டுப்பதிவுக்காக  அழைத்து வந்துள்ளனர். அப்போது, தேர்தல் விதிமுறைகளின் படி 200 மீட்டர் தள்ளிதான் இருசக்கர வாகனம் நிறுத்த வேண்டும். ஆகையால், வெளிமாநில போலீசார் யாரையும் அனுமதிக்காததால் போலீசாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், வாக்குச்சாவடி அருகே இருசக்கர வாகன கண்ணாடியை போலீசார் அடித்து உதைத்தனர். 

இதனையடுத்து, 100க்கும் மேற்பட்டோர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் தடியடி நடத்தினர். இதனால், ஒருமணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும், அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

click me!