கோரத் தாண்டவமாடும் கொரோனா... எக்கச்சக்க கெடுபிடியுடன் மீண்டும் வரும் இ- பாஸ் விதிமுறை..!

Published : Apr 06, 2021, 02:37 PM IST
கோரத் தாண்டவமாடும் கொரோனா... எக்கச்சக்க கெடுபிடியுடன் மீண்டும் வரும் இ- பாஸ் விதிமுறை..!

சுருக்கம்

தமிழகத்தில் சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்கிற அச்சம் எழுந்துள்ளது.  

தமிழகத்தில் சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்கிற அச்சம் எழுந்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது கொரோனா பரவல். நேற்று மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். தற்போது இந்தியாவில் இரட்டை உருமாற்றம் அடைந்த கொரோனா பரவியிருப்பதால், அதன் வீரியமும் வேகமும் அதிவேகமாக இருக்கிறது.

குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த பின்னர் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் நிலைமை கைமீறி போய்விட்டதால் அங்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் முழு ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தியிருக்கிறது. மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானிலும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. தற்போது டெல்லியிலும் ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது அம்மாநில அரசு. கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பரவல் உக்கிரமாக இருப்பதால், இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று முதல் வரும் ஏப்ரல் 30 வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர்களைத் தவிர்த்து பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக இ-பாஸ் விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும், முதல்வர் கெஜ்ரிவாலும் ஊரடங்கு ஒரு தீர்வல்ல என்று கூறியிருந்தது 

PREV
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!