அதிமுகவிடம் கோடி கணக்கில் பணம் இருக்கு.. கொள்கை தான் இல்லை - அதிமுகவை கலாய்த்த சீமான்

By Raghupati RFirst Published Jul 3, 2022, 8:15 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் ஐயாயிரம் கோடி கொடுத்து எம்எல்ஏக்களை கொண்டு சென்று ஆட்சி அமைப்பது அடிப்படை ஜனநாயகத்தை மதிக்காத அறம் அற்ற ஒரு கட்சி பிஜேபி.

சீமான் பேட்டி

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரியும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘30 ஆண்டுகளாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஆறு தமிழர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. 

எழுவர் விடுதலை

எழுவர் விடுதலையில் பேரறிவாளன் விடுதலை பல சட்ட போராட்டத்திற்கு பின்பு வெற்றி பெற்றது. நீதி அரசர் தாமஸ் பேரறிவாளனுக்கு கொடுத்த தீர்ப்பே அனைவருக்கும் பொருந்தும். தமிழக ஆளுநர் இதனை பொருட்படுத்தாமல் ஆறு நபர்கள் விடுதலையை தமிழக ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இதற்கான முன் நகர்வை திமுக அரசு கொண்டு சேர்க்க வேண்டும். அக்னிபாத் திட்டமே ஆர்எஸ்எஸ்க்கு ஆள் சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான், அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்திற்கு ஆள் எடுப்பதற்காக மக்கள் வரிப்பணத்தில் ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. 

மேலும் செய்திகளுக்கு.. ஓபிஎஸ் செய்த தவறு இதுதான்..உண்மையை போட்டு உடைத்த எடப்பாடியார் - என்ன சொன்னார் தெரியுமா?

குடியரசு தலைவர் தேர்தல்

நான்காண்டுகள் பயிற்சி முடித்து வெளியே வரும்போது பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்துடன் தான் வருவான். ஏற்கனவே 15 லட்சம் குடுக்கிறேன் என்று சொல்லிக் கொடுத்து விட்டார்கள் தற்போது இவர்களுக்கு 12 லட்சம் கொடுக்க மற்றும் எங்கிருந்து நிதி கிடைக்கும். ராம்நாத் கோவிந்த் ஐந்தாண்டுகளாக குடியரசு தலைவராக இருந்து என்ன நடந்தது தேசத்தின் முதல் குடிமகனை மக்கள் தேர்வு செய்ய முடியாது என்ற அமைப்பு சரியனாதா ? என்று கேள்வி எழுப்பினார்.

திரௌபதி முர்மு

தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து ராம்நாத் கோவிந்த் குடியரசு தலைவராக இருந்ததால் எங்களுக்கு என்ன பயன். தாழ்த்தப்பட்ட குடிமக்களுக்கு என்ன பயன் இந்தியாவில் முதல் குடிமகனுக்கே கோவிலுக்கு செல்ல அனுமதிக்காமல் மரத்தின் கீழே நின்று சென்றுள்ளார். தற்பொழுது திரௌபதி முர்மு இவர் மட்டும் வந்து என்ன செய்யப் போகிறார் ? பழங்குடி பெண்ணாக இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கு வேட்பாளராக திரௌபதி முர்மு வரவேற்கிறோம். 

மேலும் செய்திகளுக்கு.. செம ட்விஸ்ட்.! திரெளபதிக்கு ஓட்டு போடும் பிரேமலதா & சுதீஷ்.. எந்த பதவியிலும் இல்லையே எப்படி?

அதிமுக விவகாரம்

மகாராஷ்டிராவில் ஐயாயிரம் கோடி கொடுத்து எம்எல்ஏக்களை கொண்டு சென்று ஆட்சி அமைப்பது அடிப்படை ஜனநாயகத்தை மதிக்காத அறம் அற்ற ஒரு கட்சி பிஜேபி. நாங்கள் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களோ நிர்வாகிகள் அல்ல. அதில் நாங்கள் கருத்து கூறி ஒன்றும் ஆகப்போவதில்லை. அதிமுகவில் கோடியில் பணம் இருக்கு ஆனால் கட்சியில் கொள்கை இல்லை., அதிமுகவில் பணம் கொடுத்து மாவட்ட செயலாளர்களை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது’ என்று கலாய்த்தார் சீமான். 

மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !

click me!