அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 11ல் பொதுக்குழு
பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் பணிகளும், பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பொதுக்குழு நடத்த தடை ஏற்பட்டால், ஆன்லைன் வாயிலாக பொதுக்குழுவை நடத்தும் திட்டத்தை பிளான் -பி ஆக எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,பொருளாளரான ஓபிஎஸ் அவர்களின் ஒப்புதலின்றி பொதுக்குழுவை கூட்டினால் அது செல்லாது என்றும், குறிப்பாக, அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு.. ஓபிஎஸ் செய்த தவறு இதுதான்..உண்மையை போட்டு உடைத்த எடப்பாடியார் - என்ன சொன்னார் தெரியுமா?
அதிமுக பொதுச்செயலாளர்
இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதன், ‘ புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா காலத்தில் பொதுச்செயலாளர் பதவியில் என்னென்ன அதிகாரங்கள் இருந்ததோ,அந்த அத்தனை அதிகாரங்களையும் உள்ளடக்கிய பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு,அந்த பதவியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நியமனம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இதனிடையே,இந்த பொதுக்குழு செல்லாது என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவே இத்தகைய தவறான தகவல்களை அவர் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.மாறாக,அதிமுக பொதுக்குழு சட்டப்படி, சட்ட விதிகளுக்குட்பட்டு நடைபெறும்.
மேலும் செய்திகளுக்கு.. செம ட்விஸ்ட்.! திரெளபதிக்கு ஓட்டு போடும் பிரேமலதா & சுதீஷ்.. எந்த பதவியிலும் இல்லையே எப்படி?
எடப்பாடி பழனிசாமி
இதை யாராலும் தடுக்க முடியாது.மேலும்,பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செயல்பாட்டுக்கு வரும். இரண்டு நாட்களுக்கு முன்பு,நான்தான் என்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறேன் என்று அண்ணன் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். அவரின் ஆதரவாளர் வைத்திலிங்கம் இரட்டை தலைமை சர்ச்சை காரணமாக ,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு செல்லாது என்று சொல்கிறார்.அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்பதை வைத்திலிங்கமும் ஒப்புக் கொள்கிறார்.
அவர்களுக்குள்ளாகவே ஒற்றைக் கருத்து இல்லை. எனவே,அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் இல்லை.ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்.99% கழக நிர்வாகிகளும்,பொதுக்குழு உறுப்பினர்கள்,தொண்டர்களின் ஒற்றைத் தலைமை விருப்பத்தை நிறைவேற்ற பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !