பட்ட பகலில் கொலை நடக்குது.. தமிழகத்தில் எதை பத்தி பேசினாலும் குண்டாஸ்.! சீறும் சீமான் !

By Raghupati RFirst Published May 24, 2022, 4:14 PM IST
Highlights

பட்ட பகலில் கொலை நடக்கும் அளவுக்கு தான் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு உள்ளது. இப்போதெல்லாம் பேசினாலும் எழுதினாலும் கூட  குண்டாஸ் சட்டம் போடுகிறார்கள்.

சி.பா ஆதித்தனாரின் 41- வது நினைவு நாளை யொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  எழும்பூரில் உள்ள அவரது  உருவ சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசினார். அப்போது அவர், ‘பாமர மக்களும் நாட்டு நடப்பை படித்து அறிந்து கொள்ள வேண்டும் அரசியல் தெளிவு பெற வேண்டும் என்ற முயற்சியில்  நாளிதிழை தொடங்கியவர் சி.பா ஆதித்தனார். நாம் தமிழர் என்ற இயக்கத்தை தொடங்கியவர் ஐயா சி.பா ஆதித்தனார் என்றும் அவர் ஆற்றிய பணியை துளியும்  சமரசம் இல்லாமல் நாங்கள் பணியாற்றுவோம். 

மோடி தொடங்கி வைத்து திட்டமெல்லாம் தமிழகத்திற்கு நன்மை தந்து உள்ளதா? எட்டு வருடங்களாக பல்வேறு திட்டங்களை அறிவித்து தான் இருக்கிறார்கள். ஒன்றும் செயல் படுத்த வில்லை எனவும் எய்ம்ஸ்  மருத்துவமனை கட்டுவதற்கு வெறும் செங்கல் மட்டும்தான் இருக்கிறது. இறக்கிய ஒரு செங்கலையும் ஒருவர் எடுத்துச் சென்று விட்டார். பட்ட பகலில் கொலை நடக்கும் அளவுக்கு தான் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு உள்ளது. இப்போதெல்லாம் பேசினாலும் எழுதினாலும் கூட  குண்டாஸ் சட்டம் போடுகிறார்கள்.

முதலில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை என்ன என்று சொல்ல வேண்டும் .காமராஜர் ஆட்சியை பற்றி கூற தமிழக காங்கிரஸ் கட்சிக்கு என்ன தகுதி உள்ளது. மு.க.ஸ்டாலின் அவர்களே தனது தந்தையின் ( கருணாநிதி யின் )  ஆட்சியை கொடுக்க முடியும் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு காங்கிரஸ்  கட்சி எப்படி  காமராஜர் ஆட்சி   கொடுக்க முடியும் ?.பெட்ரோல்  டீசல் விலையை 50 ரூபாய் உயர்த்தி விட்டு இப்போது குறைக்க முடியும் என்றால் ஏன் முன்னரே விலையை குறைக்கவில்லை’ என்று கூறினார்.

இதையும் படிங்க : அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்..? வெளியே கசிந்த தகவல்.! வேட்பாளர்கள் இவர்களா ?

இதையும் படிங்க : திமுகவுடன் கூட்டணி வச்சது பெரிய தப்பு..என்ன பண்றது.! புலம்பும் கே.எஸ் அழகிரி !

click me!