மோடி போல் ஒரு நடிகரே இல்லை..சிவாஜி இருந்திருந்தால் செவாலியர் பட்டத்தை மோடியிடம் கொடுத்திருப்பார் - முத்தரசன்

By Ajmal Khan  |  First Published Apr 7, 2024, 9:46 AM IST

அமலாக்கத்துறையும், வருமானவரிதுறையும் மோடியால் ஏவி விடப்படக்கூடிய நாய் குட்டிகளா? எதிர்க்கட்சிகள் மீது மட்டுமே பாய்ந்து கொண்டிருக்கிறது ஏன் என முத்தரசன் கேள்வி எழுப்பினார்.


சுதந்திரமாக செயல்பட முடியாத நீதிமன்றம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில், கரூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், இந்த தேர்தல் பாசிசத்திற்கு எதிரான தேர்தல், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதற்கான தேர்தல், அரசியலமைப்பு சட்டம் காக்கப்பட வேண்டும் என்பதற்கான தேர்தல், அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கி தந்துள்ள அமைப்புகள் காக்கப்பட வேண்டும் என்பதற்கான தேர்தல்,

Latest Videos

undefined

ஏன் இதெல்லாம் காக்கப்பட வேண்டும் என்றால் இதெல்லாம் நிலை குலைந்து போயுள்ளது.  கடைக் கோடி மக்கள் கடைசி வாய்ப்பாக தேடி ஓடி செல்கின்ற இடம் நீதிமன்றம். இந்த நீதி மன்றம் மோடியின் ஆட்சியில் சுதந்திரமாக செயல்படுகிறதா என கேள்வி எழுப்பினார். கட்சிகளை கடந்து, மதங்களை கடந்து, ஜாதிகளை கடந்து பொதுவான பிரச்சனைகளை பார்க்க வேண்டும். 

ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர்

நீதிமன்றம் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை, சட்டத்தின் படி செயல்படமுடியவில்லை, சிலரின் உத்தரவுக்களுக்காக காத்திருக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. எதிர்கட்சிகளே இல்லாத இந்தியா என்ற நிலையை உருவாக்க மோடி திட்டமிடுகிறார். தமிழகத்தில் பேசும் போது திமுக என்ற கட்சியே தேர்தலுக்கு பிறகு இருக்காது என தெரிவிக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் பேசும் போது காங்கிரஸ் கட்சியை ஒழிப்போம் என கூறுகிறார்.

கொள்கை ரீதியாக எதிர்த்து பேசட்டும் அது தான் பண்பாடு. ஆனால் கட்சியை அழித்து விடுவோம் என கூறுகிறார். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே நாடு ஒரே தலைவர் இதை நோக்கி நாடு சென்று கொண்டுள்ளது.  இது நாட்டிற்கு ஆபத்து இல்லையா.? இது சர்வாதிகார பாதை இல்லையா.? கச்சத்தீவை காங்கிரஸ்- திமுக கொடுத்துவிட்டதாக மோடி கூறுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக யார் பிரதமர்.ழ மோடி தானே பிரதமர் என்ன செய்து கொண்டிருந்தார். 

மோடிக்கு செவாலியர் பட்டம்

10 ஆண்டுகளாக பேசாத மோடி இப்போ ஏன் பேசுகிறார். 2 கோடி வேலைவாய்ப்பு என்ன ஆச்சு என்று கேட்டால் கச்சத்தீவு என்கிறார். 15 லட்சம் ரூபாய் என்ன ஆச்சு என கேட்டால் கச்சத்தீவு என்கிறார். வெள்ள நிவாரண நிதி எங்கே என கேட்டால் கச்சத்தீவு என்கிறார். இது போல ஒரு பிரதமரை பார்த்ததில்லை என தெரிவித்தார். பல பிரதமர்களை பார்த்துள்ளோம். ஆனால் இப்படி பொய் பேசும் பிரதமரை பார்த்தில்லை.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் செவாலியர் என்ற பட்டத்தை திருப்பி கொடுத்திருப்பார். வேறு யாருக்கு கொடுக்கலாம் என கேட்டிருந்தால் என்னையை விட சிறப்பாக மோடி நடிக்கிறார் அவருக்கு கொடுத்து விடுங்கள் என கூறியிருப்பார். நானாவது படத்தில் நடிக்கிறேன். ஆனால் மோடி நிஜத்திலும் நடிப்பதாக கூறியிருப்பார் என முத்தரசன் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் அண்ணாமலை.. வேட்பாளர் செலவு கணக்கில் சேர்த்து அதிர்ச்சி கொடுத்த தேர்தல் அதிகாரி

click me!