புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் அண்ணாமலை.. வேட்பாளர் செலவு கணக்கில் சேர்த்து அதிர்ச்சி கொடுத்த தேர்தல் அதிகாரி

By Ajmal Khan  |  First Published Apr 7, 2024, 9:09 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 95 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அண்ணாமலை கோவையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஏற்பாடுகளுக்கான செலவை அண்ணாமலையின் பெயரில் சேர்க்கப்பட்டுள்ளது. 


வேட்பாளர் செலவு.?

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. வேட்பாளர்கள் வீதி, வீதியாக சென்று வாக்குகளை வேட்டையாடி வருகின்றனர். மேலும் வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளை குறிப்பிட்ட அளவு தான் செலவிட முடியும் அந்த வகையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு தொகை நிர்ணயம் செய்யப்படும். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 70லட்சம் ரூபாய் வரை வேட்பாளர்களை செலவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Tap to resize

Latest Videos

இந்த தேர்தலில் 95 லட்சம் என உயர்த்தியுள்ளது. எனவே தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்விற்கான செலவு வேட்பாளர் பெயரில் சேர்க்கப்படும். இந்தநிலையில்   கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள  தனியார் அரங்கத்தில் ப்ரொபஷனல் இன் *பாலிடிக்ஸ் என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

புத்தக வெளியீட்டு விழாவில் அண்ணாமலை

இந்த நிகழ்ச்சியில் கோவை தொகுதி வேட்பாளரும், தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கபட்டது. இதனையடுத்து இந்த நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்கப்பட்டு இருந்த நிலையில்  உதவி தேர்தல் அதிகாரி அனுமதி  மறுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக தரப்பு,   சென்னை உயர்நீதிமன்றத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தர்மராகவன் என்பவர் வழக்கு தொடுத்த நிலையில்,  

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழகறிஞர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுத்த உத்தரவை தேர்தல் நடத்தை விதிகளின்படி மறுபரிசீலனை செய்து சனிக்கிழமை பிற்பகலுக்குப் பின் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி கிராந்தி குமார் பாடி  நேற்று இந்த நிகழ்விற்கு அனுமதி வழங்கி புதிய உத்திரவினை வழங்கினார். 

அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்.! மதுபானங்களின் விலைகள் அதிரடி உயர்வு.. இந்த மாநிலத்தில் அமல்..

அண்ணாமலை பெயரை போட்டதும் அனுமதி கொடுக்கவில்லை

இந்த புதிய புதிய உத்திரவில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடத்தும் செலவுகள்  பா.ஜ.க வேட்பாளரின் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு அனுமதியானது வழங்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அண்ணாமலை புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.  நான் பேசும் ஒவ்வொரு வார்த்தை நுணுக்கமாக கவனிக்கப்படுறது, கோவையின் வேட்பாளராக இருப்பதால்  நான் அரசியல் பேச முடியாது என தெரிவித்தார்.

அண்ணாமலை பெயரை போட்டவுடன் அனுமதி கொடுக்கவில்லை என தெரிவித்த அவர், புரபசனல்கள் பாலிட்டிக்ஸ் வருவது காலத்தின் கட்டாயம் தான் , இப்போதைய அரசியல் களம்  இன்னும் வேகமாக வளரும் எனவும் தெரிவித்தார். 2024 மிக முக்கியமான தேர்தல், நிறை விஷயங்களை உடைக்கிறது,  சாதி, கூட்டணி போன்றவைகளை உடைக்கும் தேர்தலாக இது இருக்கும் எனவும் தெரிவித்தார். 

click me!