39 தொகுதிகளையும் தட்டி தூக்குறோம்... அதிக வாக்கு கோவை, பொள்ளாச்சி, நிலகிரி ...மார்தட்டும் செந்தில் பாலாஜி

By Ezhilarasan BabuFirst Published Aug 26, 2022, 12:47 PM IST
Highlights

2024 ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கைப்பற்றும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். அதில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அவர் கூறியுள்ளார்.

2024 ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கைப்பற்றும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். அதில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அவர் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டம் சென்றுள்ளார். 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர்க்கு நலதிட்ட உதவிகள் வழங்கியுள்ளார், இதைத் தொடர்ந்து பிற கட்சிகளில் இருந்து விலகி 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது,  பொள்ளாச்சியில் இந்த நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது, அதில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டி பாஜகவை சேர்ந்த மைதிலி வினோத் உள்ளிட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

இதனையடுத்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மாற்றுக் கட்சியில் இருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள், நான் மாற்றான் தாய் போல நடத்த மாட்டேன், அனைவரும் ஒரு தாய் மக்கள் போல செயல்படுவோம், வரவேண்டிய இடத்திற்குத்தான் வந்திருக்கிறீர்கள், சிந்தாமல் சிதறாமல் உங்களை செந்தில்பாலாஜி திமுக கொண்டு வந்துள்ளார், ராஜகண்ணப்பன் யாரையும் அவ்வளவு எளிதில் பாராட்ட மாட்டார், ஆனால் அவரே சரியான ஆளைத்தான் பொறுப்பாளராக போட்டிருக்கிறார்கள் என பாராட்டினார்.

இதையும் படியுங்கள் : அதிமுகவினரை விலைக்கு வாங்க பேரம் பேசும் ஓபிஎஸ்.? தரம் தாழ்ந்த செயலை வரலாறு மன்னிக்காது- ஆர்பி உதயகுமார் ஆவேசம்

50,000 பேர் திமுகவில் இணைகிறார்கள் என்பதை கேட்டு வியந்து போனேன், 50,000 பேரின் பெயர், தொலைபேசி எண்ணுடன் பட்டியலையே கொடுத்துவிட்டார் செந்தில் பாலாஜி, நாம் செய்யாத சாதனைகளோ, நாம்  பார்க்காத சோதனைகளோ இல்லை,  திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கொடுக்க வேண்டும் என்பதுதான், இதுதான் திராவிட மாடல் இவ்வாறு அவர் பேசினார். 

முன்னதாக பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென உழைத்துக் கொண்டிருக்கிறார், எவரொருவரும் போராட்டம் நடத்திதான் இந்த அரசிடம் இருந்து பெற வேண்டியது இல்லை, மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள் : ஸ்ரீமதி உடலில் கைரேகைகள்! அதிக காயங்கள் இருந்ததாக கூறியும் 5 பேருக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்

நான் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை மனம் கோணாமல் கழக உடன்பிறப்புகள் நடத்த வேண்டும், அனைவரும் ஒன்றிணைந்து திமுகவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும், நோட்டாவுடன் போட்டி போடுகிற இயக்கம் மூளையற்ற மூடர் கூட்டம், முழங்கால் தண்ணீரில் படகோட்டி விளம்பரம் செய்பவர்கள் என பாஜக அண்ணாமலையை கடுமையாக சாடினார். 

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் மகளிரை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக அரசு பேருந்துகளில் மகளிருக்கு  இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது, ஆனால் மத்திய பாஜக அரசு இலவசம் வழங்க கூடாது என்று சொல்கிறது, 410 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் இன்று 1200 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது, இதற்கு காரணமான பாஜக தமிழ்நாட்டிற்குள் நுழைய பார்க்கிறது, 54 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீசல் விலை இன்று 94 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
 
தற்போது தமிழகத்தில் செயல்படுத்துகின்ற திராவிட மாடலை இந்தியா  முழுவதும் செயல்படுத்துவதற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் 39 திலும் வெற்றிபெற முதலமைச்சர் அவர்கள் அறிவித்த வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்றார்கள் என்று சொல்லுமளவிற்கு பொள்ளாச்சி, கோவை, நீலகிரி மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிக பெரும்பான்மையுடன் மகத்தான வெற்றி பெற்றது அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்று சொல்லும் அளவிற்கு  கழகத்தில் இணைத்துக் கொண்டவர்கள் அனைவரும் அதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 

click me!