சிறையை காட்டி அச்சப்படுத்த முடியாது..! இனி தான் ஆட்டத்தை பார்க்கப்போறீங்க...! ஸ்டாலினை எச்சரிக்கும் பாஜக

By Ajmal KhanFirst Published Aug 26, 2022, 11:25 AM IST
Highlights

பாரதமாதா சிலை வைக்கப்பட்டிருந்த வளாகத்தை உடைத்து உள்ளே சென்ற வழக்கில் பாஜக மாநில துணை தலைவர் கேபி ராமலிங்கம் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் நேற்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
 

கே.பி.ராமலிங்கம் ஜாமினில்  விடுதலை

75வது இந்திய சுதந்திர தின விழாவையொட்டி, பாஜக சார்பாக தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணி முடிவில் அரசு சார்பாக அமைக்கப்பட்டிருந்த பாரதமாதா சிலைக்கு மாலை அணிவிக்க திட்டமிடப்பட்டது. அப்போது அந்த வளாகம் பூட்டப்பட்டதையடுத்து பூட்டை பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் உடைத்துள்ளார். கே.பி. ராமலிங்கம் மற்றும் பாஜகவினர் பூட்டை உடைக்கும் முன்னரே காவல் துறையினரும் கோயில் நிர்வாக அதிகாரிகளும் வெளியில் நின்று வழிபாடு செய்து விட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதனை கேட்காமல், கோயில் பூட்டை உடைத்த பாஜக மாநில துணைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.பி. ராமலிங்கம் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.  

பெரியார் சிலை பற்றி சர்ச்சை பேச்சு... கனல் கண்ணனின் ஜாமின் மனு தள்ளுபடி!!

பாஜகவை அச்சப்படுத்த முடியாது

இந்தநிலையில், கே.பி.ராமலிங்கத்துக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க பென்னாகரம் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டிருந்தது. சிகிச்சைக்கு பிறகு சேலம் மத்திய சிறையில் கே.பி.ராமலிங்கம் அடைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து நேற்று கே.பி ராமலிங்கத்திற்கு ஜாமின் கிடைத்ததையடுத்து விடுதலை செய்யப்பட்டார். தனது சொந்த ஊரான ராசிபுரத்திற்கு வந்த கே.பி ராமலிங்கத்திற்கு பாஜகவினர் உற்சாகமாக வரவேற்ப்பு அளித்தனர். பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கேபி ராமலிங்கம், , பாஜகவினரை சிறையை காட்டி மிரட்டி விடலாம் என தமிழக முதலமைச்சர் நினைத்தால்,  நாளையில் இருந்து பாஜக என்ன செய்யப் போகிறது என பார்ப்பார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு... சிகிச்சைக்காக அவசரமாக ஜெர்மனி பயணம்

இனி பலனை திமுக அடையும்

பாஜக வீறு கொண்டு எழுந்து நாட்டு மக்கள் மத்தியில்அனைத்து விஷயங்களை எடுத்துரைப்போம் என கூறினார்.  பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தவர்களை கைது செய்துள்ளது திமுக அரசு. அதற்கான பலனை இனி திமுக அடையும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் . பாஜகவை மிரட்டி பார்க்கலாம் என நினைத்தால் இது அஞ்சுவதற்கான இடமே இல்லையெனவும் கே.பி ராமலிங்கம் திட்டவட்டமாக  கூறினார்.

இதையும் படியுங்கள்

பிடிஆர் வாகனம் மீது செருப்பு வீச்சு ஆடியோ..! இது அண்ணாமலை குரல் தான், ஆனால் ...! பகீர் கிளப்பும் பாஜக நிர்வாகி


 

click me!