கோவையில் என்ஐஏ சோதனை என்ற பெயரில் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகள் போல சித்தரிக்கப்படுபவதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வேதனை தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சயின் தலைவர் ஜவாஹிருல்லா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கோவையில் கடந்த ஆண்டு நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை காரணமாக வைத்துக் கொண்டு தொடர்ந்து பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இஸ்லாமிய குடும்பத்தினரை துன்புறுத்தி வருகின்றனர். இது உண்மையில் கண்டிக்க தக்கது. கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து தண்டிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்.
ஆனால் அரபு மொழி பயின்ற முன்னாள் மாணவர்கள் குடும்பங்களை குறி வைத்து அதிகாலை நேரத்தில் வீட்டின் கதவை உடைப்பது போல தட்டி விசாரணை என்ற பெயரில் இஸ்லாமியர்களை அழைத்து சென்று மக்கள் மத்தியில் இஸ்லாமிய சகோதரர்களை தீவிரவாதிகள் போல சித்தரிப்பது மிகவும் கண்டிக்கதக்கது. இதனை என்ஐஏ மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது மாற்றபடுவார்கள் என்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தொடர்ந்து பேசிய ஜவாஹிருல்லா அரபு மொழி உலகில் பல்வேறு நாடுகளில் பேசும் மொழியாக உள்ளது. இந்த அரபு மொழி பயின்ற முன்னாள், இன்னாள் மாணவர்களின் குடும்பங்களை சோதனை என்ற பெயரில் என்ஐஏ திடீரென சோதனை நடத்தி இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கி அவர்கள் வைத்திருந்த லேப்டாப், ரொக்க பணத்தை எடுத்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக அந்த பகுதியில் அவர்களை தீவிரவாதிகள் என கூறி வீட்டை காலி செய்ய சொல்லி துன்புறுத்தி வருகின்றனர்.
சூடுபிடிக்கும் கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்; குற்றவாளிகள் நேரில் அழைத்து வரப்பட்டு விசாரணை
கோவையை தீவிரவாதிகள் கூடாரம் போன்ற பிம்பத்தை உருவாக்கி வருகிறது என்ஐஏ. மேலகான் குண்டு வெடிப்பு யார் நடத்தியது, அதை கண்டுபிடித்து, அபினவ் பாரத் இயக்கத்தினர் தான் ரயிலில் குண்டு வெடிப்பை நடத்தியது என நாங்கள் (இஸ்லாமிய அமைப்புகள்) கண்டு பிடித்து தந்தோம். சிறுபாண்மை மக்களின் உணர்வுகளை துன்புறுத்தும், தண்டிக்கும் விதமாக அவதூறு வழக்கு போட்டு வருகிறது என்ஐஏ என்றார்.
மத்திய பிரதேசத்திற்கு மாற்றப்படும் அண்ணாமலை; விரைவில் புதிய தலைவர் - எஸ்.வி.சேகர் பகீர் தகவல்
இதற்கு முன்பே அசாருதீன் என்பவர் எற்கனவே குற்றவழக்கில் சிறையில் உள்ளார். அவரை கார் குண்டு வெடிப்பு சம்பவத்திலும், அரபு மொழி பயிலும் பயின்ற மாணவர்களுடன் தொடர்பு படுத்தி என்ஐஏ வழக்கு பதிவு செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.