முருகன் தமிழ்கடவுள், விநாயகர் இந்தி கடவுள்? ஒரே குடும்பத்தில் எப்படி வெவ்வேறு கடவுள்? காயத்திரி ரகுராம் கேள்வி

By Ezhilarasan BabuFirst Published Sep 10, 2021, 11:30 AM IST
Highlights

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி கொரோனா தொற்றும் இடையிலும் நாடு முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.

அனைவருக்கும் சங்கத்தமிழ் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நடிகையும் பாஜக கலாச்சார பிரிவு தலைவியுமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி கொரோனா தொற்றும் இடையிலும் நாடு முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தைப் பொருத்தவரையில் வைரஸ் தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்தும், பின்னர் அதை ஊர்வலமாக கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு சில இடங்களில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பெருவாரியாக மக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர். 

தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில், தமிழக பாஜக கலாச்சாரப் பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பூஜைகள் செய்து வழிபாடு செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, அனைவருக்கும் இனிய சங்கத்தமிழ் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன், முருகனை  தமிழ் கடவுள் எனவும் ,விநாயகரை இந்தி கடவுள் என்னவும் கூறுகிறார்கள்.

ஒரே குடும்பத்தை சார்ந்த இருவர் எப்படி வெவ்வேறு கடவுள்கள் ஆவார்கள் என கேள்வி எழுப்பினார். மேலும், கடவுள் என்றால் உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் கடவுள்தான் என்றும் அவர் கூறினார்.
 

click me!