ஒற்றை அறிக்கையில் சாதித்த நம்மவர்.. வீட்டிற்கே சென்று நன்றி தெரிவித்த மாணவர்கள்.. மாஸ்காட்டும் மநீம.

By Ezhilarasan BabuFirst Published Sep 10, 2021, 10:54 AM IST
Highlights

அதில் குறிப்பாக மாணவர்களின் படிப்பு காலமான ஐந்து ஆண்டுகளில் ஆன்லைன் வகுப்பு நடத்த காலங்களை தமிழ்நாடு அரசு கற்ற காலமாக ஏற்க மறுப்பதும், படித்து முடித்து மருத்துவ தகுதிச்சான்று வரும் மாணவர்கள் இங்கே பயிற்சி எடுக்க இன்டர்ன்ஷிப் வாய்ப்பின்றி அடுத்த மாநிலங்களில் பயிற்சி எடுக்கும் அவல நிலையும் முக்கியமானதாகும்

,

தங்களது கோரிக்கையை நிறைவேற்ற குரல் கொடுத்த மக்கள் நீதி மய்யம் தலைவரை அயல்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். என மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது, கடந்த 2-8-2021 அன்று மக்கள் நீதி மய்யம் கட்சி மாணவரணி சார்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களின் பிரச்சினைகளை எடுத்துக் காட்டி, அதற்கு தீர்வு கோரி அறிக்கை வெளியிடப்பட்டது. 

அதில் குறிப்பாக மாணவர்களின் படிப்பு காலமான ஐந்து ஆண்டுகளில் ஆன்லைன் வகுப்பு நடத்த காலங்களை தமிழ்நாடு அரசு கற்ற காலமாக ஏற்க மறுப்பதும், படித்து முடித்து மருத்துவ தகுதிச்சான்று வரும் மாணவர்கள் இங்கே பயிற்சி எடுக்க இன்டர்ன்ஷிப் வாய்ப்பின்றி அடுத்த மாநிலங்களில் பயிற்சி எடுக்கும் அவல நிலையும் முக்கியமானதாகும், இந்நிலையில் இப்போது தமிழ்நாடு அரசு மாணவர்களின் இரண்டாவது கோரிக்கையான இங்கேயே பயிற்சி எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்பொருட்டு அயல்நாட்டில் மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்கள் இன்று மக்கள் நீதி மையம் கட்சி தலைமை அலுவலகத்தில் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களை சந்தித்து தங்களுக்கான கோரிக்கை வைத்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

தலைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அத்துடன் விடுபட்ட இன்னொரு கோரிக்கையான ஆன்லைன் கல்வி காலத்தை மொத்த கல்வி காலத்தில் இணைக்க மக்கள் நீதி மய்யம் அரசை வலியுறுத்தும்,  பெற்றுத்தரும் என்று மாணவர்களிடம் கமல்ஹாசன் தெரிவித்ததாக மக்கள் நீதி மையத்தின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

click me!