ஓய்வு பெற்ற ஐபிஎஸ் ஆர்.என் ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா..?? ஆட்டத்தை அரம்பித்த பாஜக.

By Ezhilarasan BabuFirst Published Sep 10, 2021, 10:09 AM IST
Highlights

குறிப்பாக ஆர்.என் ரவி, காவல்துறையில் உளவுப் பிரிவில் நீண்ட நெடிய அனுபவம் பெற்றவர், துறை ரீதியாக இருந்தாலும் சரி, அவர் இதற்கு முன்னர் ஆளுநராக பதிவிவகித்த வடகிழக்கு மாநிலத்தில் அவர் சந்தித்த சவால்களாக இருந்தாலும் சரி தனக்கு கொடுக்கப்பட்ட இலக்கை மிக துல்லியமாக நிறைவேற்றி அதில் வெற்றி கண்டவர் ஆவர். 

தமிழக ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என் ரவி  ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அதேபோல அவர் காவல்துறை அதிகாரியாக இருந்தபோது உளவுத்துறையில் சிறந்த நிபுணத்துவம் கொண்டவர் என்பதால் அவர் தமிழகத்தில் ஆளுநராக நியமிக்கப்ப ட்டிருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஆர்.என் ரவி பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். 1976ஆம் ஆண்டு கேரள மாநில கேட்ட ஐபிஎஸ் ஆக தேர்வானார் அவர். தற்போதைய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஆர்.என் ரவி, காவல்துறையில் உளவுப் பிரிவில் நீண்ட நெடிய அனுபவம் பெற்றவர், துறை ரீதியாக இருந்தாலும் சரி, அவர் இதற்கு முன்னர் ஆளுநராக பதிவிவகித்த வடகிழக்கு மாநிலத்தில் அவர் சந்தித்த சவால்களாக இருந்தாலும் சரி தனக்கு கொடுக்கப்பட்ட இலக்கை மிக துல்லியமாக நிறைவேற்றி அதில் வெற்றி கண்டவர் ஆவர். அதுதான் இவர் தமிழகத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக இவர் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் ஆளுநராக இருந்து வந்த நிலையில் தமிழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காஷ்மீர் வட கிழக்கு மாநிலங்களில் நீண்ட காலமாக நிலவிவந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்ததில் ஆர்.என் ரவிக்கு முக்கிய பங்கு உண்டு. 

வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினை வாதத்தை முன்வைத்து நடைபெற்றுவந்த கலவரங்களை ஒடுக்கியவர், அது மட்டுமின்றி பிரிவினைவாதிகளை சரண்டையவைத்து, பேச்சுவார்த்தை நடத்தி அங்கு அமைதியை நிலைநாட்டியதில் அம்மாநிலத்தின் ஆளுநராக வெற்றி வாகை சூடியவர் ஆர்.என் ரவி. அதேபோல் தமிழகத்தில் பாஜக, திமுக இடையே சித்தாந்த ரீதியான கருத்து மோதல் இருந்து வருவதுடன், பாஜக தமிழகத்தில் கால் பதிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது இந்நிலையில் ஆர்.என் ரவியின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பயங்கரவாத ஒழிப்பு, உளவுத் தகவல்களை திரட்டுவது மற்றும் சர்வதேச அளவில் ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவது போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஆர்.என் ரவி, இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள தமிழகம் மற்றும் அதை ஒட்டியுள்ள இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கம் போன்றவற்றை கவனத்தில் கொண்டு ஆர்எல் ரவியை மத்திய அரசு ஆளுநராக நியமிக்க இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

ஆனால் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வரும் சில பாஜக ஆதரவாளர்கள், தமிழக பாஜக மாநில தலைவரும் காவல்துறை பின்னணியைக் கொண்டவர் அதேபோல ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என் ரவியும் நீண்ட நெடிய காவல்துறை பின்னணியை கொண்டவர், அதேநேரத்தில் உளவுப் பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார் என இனிமேல்தான் தமிழகத்தில் ஆட்டம் ஆரம்பம் என பதிவிட்டு வருகின்றனர். இது ஒரு இயல்பான அரசியல் ரீதியான நகர்வு என்பதையும் தாண்டி பாதுகாப்பு கண்ணோட்டமும் ரவி நியமனத்தில் அடங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
 

click me!