கொரோனாவுக்கு கூட்டம் கொண்டாட்டம் என்றால் மிகவும் பிடிக்கும்.. எச்சரிக்கையாக இருங்கள்..!

By vinoth kumarFirst Published Sep 10, 2021, 10:59 AM IST
Highlights

இந்தியாவில் கொரோனா 2வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. மொத்த பாதிப்பில் கேரளாவில் மட்டும் 68 சதவிகிதம் பாதிப்பு பதிவாகிறது. பண்டிகை காலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். 

கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் வீட்டிலேயே பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- இந்தியாவில் கொரோனா 2வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. மொத்த பாதிப்பில் கேரளாவில் மட்டும் 68 சதவிகிதம் பாதிப்பு பதிவாகிறது. பண்டிகை காலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். 

தடுப்பூசி செலுத்தும் பணி முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த மே மாதத்தில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த எண்ணிக்கை செப்டம்பரில் 78 லட்சமாக உயர்ந்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

இதையடுத்து பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால்;- இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த கொரோனா சூழலில் பண்டிகைகளை வீட்டில் இருந்தப்படியே கொண்டாட வேண்டும். இதை அறிவுரையாக அல்லது எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம். கொரோனா தொற்றுக்கு கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால், தீபாவளி வரை பண்டிகைகளை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கொண்டாட வேண்டும். 

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது நாட்டில் 35 மாவட்டங்களில் கொரோனா பரவல் விகிதம் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 58 சதவிகிதத்தினர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர் என்று தெரிவித்தார்.

click me!