புலியை தெலுங்கானாவில் பார்த்து பயந்து ஓடிவந்து தமிழகத்தில் முறம் வீசுவதா..? தமிழிசையை விமர்சித்த முரசொலி

By Ajmal Khan  |  First Published Sep 14, 2022, 9:15 AM IST

 சென்ற இடத்தில் பிறந்த இடத்துக்கு நல்ல பெயர் வாங்கி வந்திருந்தால் சகோதரியை உச்சிமோந்து கொண்டாடுவதும், சென்ற இடத்தில் சண்டை போட்டு, ஏட்டிக்குப் போட்டியாக தாறுமாறாக நடந்து கொள்பவரைக் கண்டித்து புத்திமதி கூறுவதும் தமிழ்நாட்டுப் பண்பாடுதானே!. என முரசொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது
 


தமிழிசையை விமர்சித்த முரசொலி

தெலுங்கானா அரசு ஆளுநருக்கு மதிப்பு அளிப்பதில்லையென தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர்கள் அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்தால் தெலுங்கானாவில் நடைபெற்றது தான் மற்ற மாநிலங்களிலும் நடைபெறும் என முரசொலி சிலந்தி பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. இதற்க்கு தமிழிசை சவுந்திராஜன் புலியை மொரத்தால் அடித்து துரத்திய தமிழச்சி பரம்பரையில் இருந்து வந்தவள் நான். இன்னொரு மாநிலத்தில் நமது சகோதரி மதிக்கப்படவில்லை என்று சொன்னால் அதை ஒருவர் நமது தமிழ்நாட்டில் இருந்தே அதை எப்படி மகிழ்வாக எடுத்துக் கொள்ள முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை என கூறியிருந்தார். மேலும் நான் அலறுகிறனோ, அழுகிறேனோ ஒன்றும் கிடையாது. என்னை மதித்தாலும், மதிக்காமல் இருந்தாலும் எனது பணியை நான் தொடர்ந்து செய்வேன் என கூறியிருந்தார். இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் முரசொலி நாளிதழ் இன்று மீண்டும் கேள்வி பதில் வாயிலாக சிலந்தி என்கிற பெயரில் கட்டுரை வெளியிட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

மதமாற்ற குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல பள்ளி... ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பித்தது குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!!

கேள்வி:- தமிழ்நாட்டிலிருந்து ஒரு கட்சியின் பத்திகையில் (முரசொலி) நான் அவமதிக்கப்பட்டதாக எழுதியுள்ளனர். நான் அவமதிக்கப்படவும் இல்லை. அறைவும் இல்லை என ஆளுநர் தமிழிசை கூறியுள்ளாரே?

சிலந்தி:- ஹைதராபாத்தில் அவர் அவமதிக்கப்பட்டதாக முரசொலி எழுதவில்லை! அவர் அப்படி கூறியதாக ஏடுகள், செய்தி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதைத்தான் முரசொலி சுட்டிக்காட்டியது. அம்மையார் பேசியதாக ஏடுகளில் வெளிவந்த செய்திகள் முழுவதையும் முரசொலி எடுத்துக் காட்டவில்லை. "ராஜ்பவன் (ஆளுநர் மாளிகை) மதிக்கப்படு வதில்லை.. பல விவகாரங்கள் குறித்து விவரங்கள் கேட்டால். அரசாங்கம் பதிலளிப்பதில்லை. ராஜ்பவன் தீண்டத்தகாத இடமாக மாறிவிட்டது" என்று அந்த நிகழ்ச்சியில் பேசியதாக 'தி இந்து' ஏடு குறிப்பிட்டிருந்தது. குடியரசு தின விழா கொண்டாட்டத்தை ஆளுநர் மாளிகையில் தான் நடத்திய போது, தெலுங்கானா முதலமைச்சர் மட்டுமல்ல: ஒரு மாவட்ட கலெக்டர் கூட அந்த விழாவுக்கு வரவில்லை; எனக்கு மதிப்புதராவிடினும் பரவாயில்லை; ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்ற அளவில் அந்தப் பதவிக்காவது மரியாதை தந்திருக்க வேண்டாமா? - என்று திருமதி தமிழிசை கேட்டதாக அதே 'தி இந்து ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டுள்ளது!

இதனைத்தான் ஆளுநர், தனக்கு ஏற்பட்ட அவமதிப்பை சுட்டிக்காட்டி, அங்கலாய்த்துள்ளார் என முரசொலி எழுதியது! இவை எல்லாம் அவமதிப்பல்ல; என்று ஆளுநர் கூற இயலாது. தான் அவமதிக் கப்பட்டதாக, அதாவது ஆங்கிலத்தில் Humiliated என்ற வார்த்தையைப் பயன்படுத்திப் பேசியதையும் ஆளுநர் மறுக்கிறாரா? அந்தப் பேச்சு 'யூ டியூப்' செய்தியில் அப்படியே இருக்கிறது. ஒருவேளை ஆளுநர் தமிழிசைக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அதனைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே? 

அம்மையார் எண்ணுவது போல அந்தப் பதவி உயர்பதவியாக இருக்கலாம்; ஆனால் அது நியமனப்பதவி. ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, சில ஆளுநர்கள் விபரம் தெரியாமல் தொல்லை கொடுக்கக்கூடாது என்பதற்காகத்தான் அரசியல் சட்டம் இயற்றிய மேதைகள் "பல்லை" புடுங்கி வைத்துள்ளனர். பல் போன பொக்கை வாயைக் கொண்டு, கடித்துக் குதறிவிடுவேன் என்று மிரட்டினால், முடிவில் என்ன கதி ஏற்படும் என்பதைத்தான் தெலுங்கானா நிகழ்வுகள் விளக்கியுள்ளன! அதைத்தான் முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.

தெலுங்கானாவில் தமிழச்சிக்கு அநியாயம் நடப்பதை ரசிப்பதா.? முரசொலிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழிசை சவுந்திரராஜன்

கேள்வி:-இன்னொரு மாநிலத்தில் நமது சகோதரி மதிக்கப்படவில்லை என்று சொன்னால், அதை எப்படி தமிழ்நாட்டிலிருந்து மகிழ்வாக ஏற்க முடியும்? - என்று அதே பேட்டியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கேட்டுள்ளாரே?

சிலந்தி:- இப்படி எல்லாம் பேட்டி தருவதாறும், பேசுவதாலும்தான் நாம் அவரை ஒரு அப்பிராணி என எழுதிக்காட்டியிருந்தோம்! சென்ற இடத்தில் பிறந்த இடத்துக்கு நல்ல பெயர் வாங்கி வந்திருந்தால் சகோதரியை உச்சிமோந்து கொண்டாடுவதும், சென்ற இடத்தில் சண்டை போட்டு, ஏட்டிக்குப் போட்டியாக தாறுமாறாக நடந்து கொள்பவரைக் கண்டித்து புத்திமதி கூறுவதும் தமிழ்நாட்டுப் பண்பாடுதானே!.

தமிழ்ப் பண்பாடு குறித்து தமிழிசை அவர்கள், தனது தந்தையிடம் முற்றிலும் கற்கவில்லையோ என்ற ஐயம்தான் நமக்கு அவர் கேள்வியிலிருந்து எழுகிறது!

கேள்வி:- புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழச்சி பரம்பரையில் வந்தவள்நான், என திருமத்தமிழிசை வீராவேசமாகப் பேட்டி தந்துள்ளாரே? 
சிலந்தி:- புலியை தெலுங்கானாவில் பார்த்து பயந்து ஓடி வந்துவிட்டு, தமிழ்நாட்டில் நின்று முறத்தை வீசுவதில் என்ன வீரமோ? ஆளுநர் திருமதி. தமிழிசைதான் விளக்க வேண்டும். என முரசொலி தனது கேள்வி பதிலில் கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படியுங்கள்

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை.. குற்றப்பத்திரிகை என்ன ஆச்சு..? கேள்வி எழுப்பும் அண்ணாமலை

click me!