அமைச்சர் துரைமுருகன் பேசிக்கொண்டிருக்கும் போது திடீர் மின்வெட்டு.. தூக்கி அடிக்கப்பட்ட 2 ஊழியர்கள்.!

By vinoth kumarFirst Published Sep 14, 2022, 7:11 AM IST
Highlights

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அமைச்சர் தனது பள்ளி நிகழ்வுகளை மேடையில் பகிர்ந்து கொண்டு இருந்த போது திடீரென மின்சாரம் தடைப்பட்டது. 

காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசிக்கொண்டிருந்த போது இருமுறை மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் 2 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அமைச்சர் தனது பள்ளி நிகழ்வுகளை மேடையில் பகிர்ந்து கொண்டு இருந்த போது திடீரென மின்சாரம் தடைப்பட்டது. 

இதையும் படிங்க;- மத்தியில் ஆளுகிற கட்சின்ற திமிருல பாஜக வரம்பு மீறுகிறது... துரைமுருகன் விளாசல்!!

உடனடியாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டார். மின்சாரம் வந்துவிடும் என அமைச்சரும் மைக் முன் காத்திருந்தார். 10 நிமிடங்களுக்கு பிறகு மின்சாரம் வர ஒரு நொடியிலேயே மின்சாரம் மீண்டும் துண்டிக்கப்பட்டது. இதனால், அதிர்ந்து போன ஆட்சியர் மற்றும் நந்தகுமார் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் மீண்டும் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினார். 

அதனையடுத்தும் 10 நிமிடங்களுக்கு மின்சாரம் வராமல் இருக்க அமைச்சர் துரைமுருகன் எரிச்சலடைந்தார். இதையடுத்து, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டு உடனடியாக புறப்பட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காட்பாடி தாராபடவேடு பகுதி துணை மின் நிலைய உதவிப் பொறியாளர் கவி கிரண், சிட்டிபாபு ஆகிய இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க;-  ‘அந்த’ இடத்தில் கைவைத்த பாஜக பொதுச்செயலாளர்.. சசிகலா புஷ்பாவிற்கு நடந்தது என்ன ? சர்ச்சையில் பாஜக!

click me!