முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை.. குற்றப்பத்திரிகை என்ன ஆச்சு..? கேள்வி எழுப்பும் அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published Sep 14, 2022, 8:10 AM IST

திமுக ஆட்சியின் மேல் மக்களின் அவநம்பிக்கை அதிகரித்து வருவதை திசை திருப்பும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
 


முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை

திமுக ஆட்சி ஏற்பட்ட கடந்த 15 மாதங்களில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். வீரமணி, விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி, கேபி அன்பழகன் என இந்த சோதனையானது. நேற்று மீண்டும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் 3 வது முறையாக நடைபெற்றது. இந்த சோதனையின் போது அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேடாக எல்இடி பல்பு வாங்கியதாக புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சோதனையானது நேற்று இரவு நிறைவு பெற்றது. இதே போல முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான மற்றும் நெருங்கிய நண்பர்கள் என 13 இடங்களில் சோதனையானது நடைபெற்றது. இந்த சோதனையும் முடிவடைந்துள்ளது. திமுக அரசு மக்களை திசை திருப்பும் வகையில் சோதனையில் ஈடுபட்டு வருவதாக அதிமுக கண்டனம் தெரிவித்து இருந்தது.

Tap to resize

Latest Videos

விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை... ரூ.18.37 லட்சம் ரொக்கம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!!

குற்றப்பத்திக்கை எங்கே..?

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுக ஆட்சியின் மேல் மக்களின் அவநம்பிக்கை அதிகரித்து வருவதை திசை திருப்பும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருவதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது. இதற்கு முன்னர் செய்த சோதனைக்கே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலிருக்கும் போது புது சோதனைகளின் அடிப்படை நோக்கம் என்ன? திமுக  அமைச்சர்கள் மீது குவியும் ஊழல் புகார்களை இருட்டடிப்பு செய்ய அரசு இயந்திரங்களை ஏவல் இயந்திரங்களாக மாற்றி இருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு என அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

அமைச்சர் துரைமுருகன் பேசிக்கொண்டிருக்கும் போது திடீர் மின்வெட்டு.. தூக்கி அடிக்கப்பட்ட 2 ஊழியர்கள்.!

 

click me!