ஆடு திருடிய திருடன் போல அகப்பட்டு முழிக்கும் ஆளுநர்..! எத்தனை சூடுபட்டாலும் திருந்தாத ஜென்மம்- முரசொலி காட்டம்

By Ajmal Khan  |  First Published Jun 18, 2023, 12:40 PM IST

செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கக் கோரி, முதலமைச்சருக்கு எழுதியிருந்தார் என்பதே. ஆளுநர் ரவி அரசியல் சட்டம். ஆளுநர்களுக்கு அளித்த அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார் என்பதைக் காட்டவில்லையா? என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. 


சிரிப்பதா? கோபப்படுவதா?

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில் இது தொடர்பாக முரசொலி வெளியிட்ட கட்டுரையில், தமிழ்நாட்டின் ஆளுநர் ரவியை நினைத்தால் பல நேரங்களில் சிரிப்பதா? கோபப்படுவதா?" என்றே தெரியவில்லை! ஆடு திருடிய திருடன் என்பார்களே அதுபோல அவர் அகப்பட்டு முழிப்பதை நம்மால் உணர் முடிகிறது? எதையும் யோசிக்காது முடி வெடுக்கும் முந்திரிகொட்டை" தனத்தால் அவர், தான் மட்டுமல்லாமல் தான் வசிக்கும் பதவியையும் தரம் தாழ்த்திக்கொண்டிருக்கிறார்.

Latest Videos

undefined

பயமின்றி அரசியல் செய்வது எப்படி? பிரதமர் மோடியைப் பார்த்து கத்துக்கோங்க!: ஸ்டாலினுக்கு அண்ணாமலை அட்வைஸ்

பதவிகளை எதிர்நோக்கி எழுந்த இயக்கமில்லை தி.மு.க.

தமிழ்நாடு எத்தனையோ ஆளுநர்களைப் பார்த்துள்ளது! சில ஆளுநர்கள் விமாசனத்துக்கும் ஆளாகியுள்ளனர். ஆனால் இன்றைய ஆளுநர் ரவி போல எத்தனை சூடுபட்டாலும் திருந்தாத ஜென்மாய்களாக யாரும். இருந்ததில்லை, தன்னைப்பெரிய வரலாற்று அறிஞராகக் கருதி பல்வேறு அபத்தக் கருத்துக்களை அவ்வப்போது அவீசி வருகிறார்! ஆனால், திராவிட இயக்க வரலாற்றை அவர் படிக்கவில்லை என்பதை அவரது செயல்பாடுகள் தெளிவாக்குகின்றன.இந்த இயக்கம் தன்மான உணர்வுகளை ஊட்டி வளர்ந்த இயக்கம்! சுயமரியாதை எனும் அடித்தனத் எழுப்பப்பட்டதில் கொள்கைக் கோட்டம் இது பதவிகளை எதிர்நோக்கி எழுந்த இயக்கமில்லை தி.மு.க.

ஆளுநரின் அதிகார வரம்பு என்ன.?

அதனைத்தான் தனது சமீபத்திய காணொலி பேச்சில் முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் துள்ளியமாக எடுத்துரைத்தார்? நாங்கள் ஆட்சிக்காக கட்சி நடத்துகிறவர்கள் அல்ல கொள்கைக்காக கட்சி நடத்துபவர்கள். மதவாதம், சாதிய வாதம், சனாதனம் பிறப்பால் உயர்வு-தாழ்வு, மேல்-கீழ் இற்ற மாதிரியான மனித சமுதாயத்துக்கு விரோத மான பிற்போக்கு எண்ணங்களுக்கு எதிரானவர்கள் நாங்க...." எனப் பேசிய கழகத் தலைவர் தளபதியின் உரையில் காணப்பட்ட கனிவு - தெளிவு - துணிவு ஆளுநர் ரவி அறிந்திட வேண்டிய ஒன்றாகும்! எதிரிகளின் வியூகங்களை எதிர் வியூகம் கொண்டு நகர்க்கும் ஆற்றலை தங்கள் தலைவர்கள் மூலம் கற்று அறிந்துள்ளது தி.மு.க.!

தமிழ்நாட்டு மக்களின் மொழி உணர்வோடு மோதிப் பார்த்தார். தமிழ்நாடு என்பது சரியல்ல: தமிழகம் என்பதே சரி எனப்பேசிவிட்டு, அவரே தன்னிச்சையாக தமிழ்நாடு ராஜ்பவன் என்பதை மாற்றி தமிழக ராஜ்பவனாக்கி எதிர்ப்பு வலுத்ததும் ஆமை ஓட்டுக்குள் முடக்கிக் கொள்வது போல முடக்கிக் கொண்டார். சமத்துவத்தை உருவாக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆட்சியில் சனாதன, வர்ணாசிரமக் கொள்கைகளுக்கு தூபம் போடும் வகையில் பேசினார். எல்லாவற்றிலும் தலையிட்டு அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார்!.

செந்தில் பாலாஜியை நீக்க கடிதம்

தனது அதிகார வரம்பு என்ன என்பது அறியாது முடி வெடுக்கிறார்! பிறருக்கு தொல்லை தந்து இன்பம் காணும் 'சேடிஸ்தணம் தான் அவரது செயல்களில் பெருமளவு பிரதிபலிக்கிறது. செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். அதற்கு முதலமைச்சர் ஆளுநரின் அதிகார எல்லையைத் தாண்டி செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தி பதில் கடிதம் எழுதியுள்ளார்.  அப்படி ஒரு கடிதம். அதாவது செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கக் கோரி, முதலமைச்சருக்கு எழுதியிருந்தார் என்பதே. ஆளுநர் ரவி அரசியல் சட்டம். ஆளுநர்களுக்கு அளித்த அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார் என்பதைக் காட்டவில்லையா?

இது திராவிட மண் நடப்பது திராவிட மாடல் ஆட்சி

சிலருக்கு எதையாவது குத்தி, குதறிக் கொண்டே இருப்பதில் ஒரு வித ஆனந்தம்; அதனைத்தான் சேடிசம் என்று கூறுவார்கள்! நமது தமிழ்நாட்டு ஆளுநரின் நடவடிக்கைகளைக் காணும்போது இதுதான் நம் நினைவுக்கு வருகிறது. தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞரால் பதப்படுத்தப்பட்ட மண் தமிழ் நாட்டு மண்! இங்கே சனாதனம், வர்ணாசிரமம் எனும் விஷச் செடிகளை வளர்க்க எண்ணி விஷமத் தனங்களில் ஈடுபடாதீர்கள்! இது திராவிட மண் நடப்பது திராவிட மாடல் ஆட்சி! இதை நடத்துபவர்கள் கொள்கை மறவர்கள் என முரசோலி தனது கட்டுரையில் காட்டமாக தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

அரசியல் கோமாளியே, தெர்மாகோல் விஞ்ஞானியே.! செல்லூர் ராஜூவை கண்டித்து பாஜகவின் போஸ்டரால் மீண்டும் சர்ச்சை

click me!