அரசியலில் எங்களை சிலர் ஜீரோ என் விமர்சித்தார்கள், ஆனால் இனி நாங்கள் தான் ஹீரோ என ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
அரசியலில் எங்களை சிலர் ஜீரோ என் விமர்சித்தார்கள், ஆனால் இனி நாங்கள் தான் ஹீரோ என ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வைத்திலிங்கம் இவ்வாறு கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: பாஜக மாநில நிர்வாகி திடீரென பதவி விலகல்... இது தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்..!
ஓபிஎஸ் இபிஎஸ் இடையே யார் பொதுச்செயலாளர் என்பதற்கான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில், பொதுக் குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார். அதை எதிர்த்து பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், அந்த பொதுக்குழு தீர்மானம் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதையும் படியுங்கள்: ஸ்டாலின் அரசுக்கு எதிராக திரும்பிய கூட்டணி கட்சிகள்.. அனுமதி கொடுத்தே ஆகனும்: அடம்பிடிகும் CPM, CPI, VCK..!!
அதற்கான விசாரணை இன்று நடைபெற்றது, அதில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பாதகமாக பார்க்கப்படுகிறது, இது ஓபிஎஸ் தரப்பிற்கு கிடைத்த வெற்றியாகவும் அவர்கள் தரப்பில் கொண்டாடப்படுகிறது, இந்நிலையில் இது தொடர்பாக ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜேசிபி பிரபாகரன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம், கடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலராக தேர்வு செய்த தீர்மானம் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானம் என அனைத்தையும் அடுத்தடுத்த விசாரணையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசியலில் நாங்கள் ஜீரோ என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார், ஆனால் இனி நாங்கள் தான் ஹீரோ என வைத்திலிங்கம் பதில் அளித்தார்.