பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளால் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், திமுகவில் மீண்டும் குடும்ப அரசியல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரியில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மற்றும் எலத்தகிரி பகுதியில் முன்னாள் முதலமைச்சரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 69 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பருகூர் ஒன்றிய செயலாளர், முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை கலந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி புடவை பேண்ட் ஷர்ட் மற்றும் அன்னதானம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுகவில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் பொது செயலாளர் இருந்தபோது அவர்களது பிறந்தநாள் அன்று எப்படி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டதோ, அதேபோன்று தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வெகு உற்சாகமாக அன்னதானங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதாக தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருப்பது தொடர்பான கேள்விக்கு, கருத்துக் கணிப்புகளை வைத்து எந்த முடிவும் சொல்ல முடியாது மக்கள் என்ன வாக்களித்து உள்ளனர் என்று சொல்கின்ற ஒரு வார்த்தையாக எடுத்துக் கொள்ள முடியாது. நாளை வாக்கு எண்ணிக்கை போது கர்நாடக மக்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பது தெரிய வரும்.
அரியலூர் பெண் அரசு மருத்துவரை செருப்பால் அடித்த வாலிபர் கைது
தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு, அமைச்சர்களை மாற்றுவதற்கு முதலமைச்சருக்கு உரிமை உள்ளது. தற்போது மாற்றத்திற்காக காரணங்கள் உள்ளது. திமுகவில் ஊழல்கள் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக குறிப்பிட்டு வருகிறார். பால் விலை உயர்வால் மக்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஊழல்களை பார்த்து அமைச்சர்கள் மாற்ற வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார். திமுக குடும்பங்கள் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடப்பதாக செய்திகள் வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் பேசிய ஆடியோ போன்றவற்றை பார்த்து தான் திமுக தற்போது அமைச்சரவை மாற்றம் செய்துள்ளது.
அதிலும் அதிமுக சொல்வதைப் போல் குடும்ப அரசியல் மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த டி ஆர் பாலுவின் மகன் தான் தற்பொழுது அமைச்சராக பதவி ஏற்றி உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள பலர் திமுக குடும்பத்தை சார்ந்தவர்களும் அமைச்சர்களின் வாரிசுகள் தான் உள்ளனர். திமுகவில் சாதாரண தொண்டர்களுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில்லை இதைத்தான் அதிமுக குடும்ப அரசியல் என விமர்சித்து வருகிறது.
9 கோடி ரூபாய் நட்டத்தில் இருந்த கைதறி துறை 20 கோடி ரூபாய் லாபத்தில் இயங்குகிறது - அமைச்சர் பெருமிதம்
முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் தொடர்பான கேள்விக்கு. முதலமைச்சர் சுற்றுப்பயணம் செல்வதை குறை சொல்ல விரும்பவில்லை முதலீடு வரட்டும் நல்ல விஷயம் தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் வெளிநாடு சென்று முதலீடு பெற்று வந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் சென்று முதலீடு பெற்று வரட்டும் பொறுத்திருந்து பார்க்கலாம் என குறிப்பிட்டார்.