இன்னும் 48 மணி நேரத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவு எடுக்கவில்லையெனில் பாஜக போராட்டத்தை கையில் எடுக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்னும் 48 மணி நேரத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவு எடுக்கவில்லையெனில் பாஜக போராட்டத்தை கையில் எடுக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை போல இவரு ஒன்னும் மலிவான மனிதன் இல்லை... கடுமையாக சாடிய காயத்ரி ரகுராம்!!
இதற்கு முன்பு கூட வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போது நமது கட்சியின் சார்பில் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கைகள் மீது மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், டிபிஐ வளாகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் குறிப்பாக கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் தேர்தல் வாக்குறுதி 177 ல் கூறியபடி டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்குவதாக திமுக ஆட்சி தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளியின் கட்டிடத்தை இடித்து விட்டு திருமண மண்டபம் கட்டுவதா? அண்ணாமலை கடும் கண்டனம்!!
இரண்டு வருடங்களாகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை. இன்னும் 48 மணி நேரத்தில் திமுக அரசு இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமூக முடிவை அளிக்க வேண்டும் என மாநில அரசை வேண்டுகிறோம். இல்லையென்றால் அவர்களின் போராட்டத்தில் பாஜக சேரும் நிலை உருவாகும் என்றும் மிகப்பெரிய அளவில் இவர்களுக்கு ஆதரவாக போராட்டத்திற்கு தயாராகியுள்ளோம். நானும் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.