அரசுப் பள்ளியின் கட்டிடத்தை இடித்து விட்டு திருமண மண்டபம் கட்டுவதா? அண்ணாமலை கடும் கண்டனம்!!

By Narendran S  |  First Published May 12, 2023, 11:10 PM IST

சென்னையில் அரசுப் பள்ளியின் கட்டிடத்தை இடித்து விட்டு திருமண மண்டபம் கட்டுவதாக வெளியான தகவலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சென்னையில் அரசுப் பள்ளியின் கட்டிடத்தை இடித்து விட்டு திருமண மண்டபம் கட்டுவதாக வெளியான தகவலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், சென்னை திருவல்லிக்கேணி பங்காரு தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளிக் கட்டிடத்தை இடித்துவிட்டு, திருமண மண்டபம் கட்டப் போவதாக, நாளிதழில் வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இதையும் படிங்க: அண்ணாமலை போல இவரு ஒன்னும் மலிவான மனிதன் இல்லை... கடுமையாக சாடிய காயத்ரி ரகுராம்!!

Latest Videos

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் உள்ள இந்தப் பள்ளியில் 115 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழகத்தில் சுமார் பத்தாயிரம் சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்களை இடித்து, புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவித்துவிட்டு, அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பள்ளிகளுக்கான இடத்தில், வணிக வளாகங்களை அமைக்கும் எண்ணம் இருந்தால், அது வன்மையான கண்டனத்துக்குரியது.

இதையும் படிங்க: 21 பேர் லிஸ்ட் ரெடி..திமுகவின் ஊழல் பட்டியலுக்கு கவுன்டவுன் போட்ட பாஜக அண்ணாமலை - திடீர் ட்விஸ்ட்

உடனடியாக, இந்தப் பள்ளி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் சிதிலமடைந்த பள்ளிகள் அனைத்திற்கும், அதே இடத்தில் புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றும், மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன், என்று தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி பங்காரு தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளிக் கட்டிடத்தை இடித்துவிட்டு, திருமண மண்டபம் கட்டப் போவதாக, நாளிதழில் வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

அமைச்சர் திரு தொகுதியில் உள்ள இந்தப் பள்ளியில் 115 மாணவர்கள் பயின்று வருகின்றனர். (1/3)

— K.Annamalai (@annamalai_k)
click me!